நிற மருத்துவம் - 1
சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து அது அதற்குரிய அளவின்படி சேர்த்துக் குழைத்தால், இறுதியில் வெண்மை நிறம் தோன்றுவதைக் காணலாம். சூரியவொளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பதை அறிந்த முன்னோர்கள், அதனை வெளிப்படையாகக் கூறாமல், மறைத்துக் கூறினார்கள்.
சூரியன் பவனி வருகின்ற தேரில் ஏழு குதிரைகள் பூட்டியிருப்பதாகக் கூறியுள்ளது, சூரியவொளியில் ஏழுவண்ணங்கள் இருப்பதைக் குறிப்பதாகும்.
சூரியனின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே என்பது, உலகம் என்பதையும் அது உருண்டு கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பதாகும். மனிதவுடம்பிலுள்ள புறவுறுப்புகளும் அகவுறுப்புகளும் ஏழுவகை நிறங்களோடு கூடியிருக்கின்றன. உடல் உறுப்புகள் செழிப்பதாகவும் செம்மையாகவும் இருக்கும் போது, உறுப்புகளின் நிறங்களும் செம்மையாக இருக்கும். உறுப்புகள் நோய்க்குள்ளாகும்போது, உறுப்புகளின் நிறமும் குன்றிவிடும்.
உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், உறுப்புகள் அடைந்த பிணி போக வேண்டும், பிணி போக வேண்டுமானால், நோய்க்குரிய மருந்துண்ண வேண்டும். நோய் எந்த நிறத்தைக் கொண்டதோ அந்த நிறத்து மருந்து அந்த நோயைத் தீர்க்கக் கூடியது. செயற்கைப் பொருள்களைப் பாதுகாக்க பூசப்படுகின்ற நிறம் வெளுத்துவிட்டால், மீண்டும் நிறம் பூசுவதைப் போல உறுப்புகளைப் பாதுகாக்கும் நிறம் ஒளியிழந்துவிட்டால், மீண்டும் உறுப்புகள் நிறம்பெறச் செய்ய அதற்குரிய நிற நீரைப் பருக வேண்டும். நிற நீர் என்பது, நிறம் கலந்த நீரல்ல.
சூரியவொளி இயற்கைப் பொருள்களால் ஆனது. அது போல், உடம்பினது உறுப்புகளும் இயற்கைப் பொருள்களானது என்பதால், இயற்கையான
நிறத்தையே உறுப்புகளுக்கு ஏற்ற வேண்டும்.பல நிறமுடைய கண்ணாடிக் குப்பிகளில் சுத்தமான தெனி நீரைநிரப்பி, சூரியவொளியில் வைத்தெடுத்து, அந்த நீரைப் பருகி வந்தால், உடம்பில் குறைந்துபோன நிறம் மீண்டும் ஒளிபெறும். உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற்று அழகுடன் விளங்கும்.சூரியவொளி நிறம் ஏழு எனச் சொல்லப்பட்டாலும் அவை ஏழும் இரண்டு நிறங்களுள் அடங்கும். அவை இரண்டும் சிவப்பு, நீலம் ஆகும். இவ்விரண்டு நிறங்களின் சேர்க்கையால் பல நிறங்கள் தோன்றுகின்றன.
உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆற்றல்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்தால் அவை வெப்பம், தட்பம் என்னும் இரண்டு அடங்கும்.
பருப்பொருளை நுண்ணியதாக்கி விரிவடையச் செய்வது, சூடு. இது வெப்பம். நுண்ணிய பொருளை ஒருங்கு திரட்டுவது, குளிர்ச்சி. இது தட்பம்.
வெட்பமும் தட்பமும் தம்மில் மிகாமலும் குறையாமலும் ஒத்து நிற்குமானால், உலகமாகிய பேருடம்பும் உடலாகிய சிற்றுடம்பும் சிதைந்து போகாமல் நிலைத்து நிற்கும். அவ்வாறல்லாமல், ஒன்று மிகுந்தும் ஒன்று குறைந்தும் இருக்குமானால், உலகமும் உடம்பும் நிலைகுலைந்து போகும்.
உலகத்துக்கும் உடலுக்கும் வெப்பத்தைத் தருவது, சூரியன். தட்பத்தைத் தருவது, சந்திரன்.சூரியனைப் பூமி சுற்றுவதனாலும் பூமியைச் சந்திரன் சற்றுவதனால் தட்பமும் வெப்பமும் தம் நிலையிலிருந்து மாறாமல் நிலை நிறுத்தப்படுகின்றன. சூரியனின் ஒலியலையும் சந்திரனின் ஒலியலையும் உடம்புக்கு வேண்டிய அளவு சூட்டையும் குளிர்ச்சியையும் அளிக்கின்றன.உடம்புக்குத் தேவையான வெப்பத்துக்கும் தட்பத்துக்கும் நிறத்துக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்க்கலாம்.சிவப்பு நிறம் வெப்பத்தையும் நீல நிறம் குளிர்ச்சியையும் கொண்டவை. தட்பமும் வெப்பமும் சமமாக இருக்கும் போது, உடம்பில் நீலமும் சிவப்பும் சமமாகவே இருக்கும்.
நிற மருத்துவம் - 2
உடம்பில் சூடு மிகுந்து காணப்பட்டால் சிவப்பு நிறம் மிகுந்திருக்கும். குளிர்ச்சி மிகுந்திருந்தால் நீல நிறம் மிகுந்திருக்கும்.சிவப்பு நிறம் மிகுதியானால், வெப்பு நோய் (அம்மை நோய்) இளைப்பு, எலும்புருக்கி, நீரிழிவு, சொறிசிரங்கு முதலியன உண்டாகும். பித்தம் பெருகும். உண்ட உணவு செரிக்காது. மயக்கம், கிறுகிறுப்பு, மஞ்சள்சாமாலை முதலிய நோய்கள் ஏற்படும்.நீல நிறம் மிகுதியானால் கோழை கட்டும். உடம்பு அளவுக்கு மேல் பருமனாகும். திமிர்ப்பு உண்டாகும். கால், கைகளில் பிடிப்பு ஏற்படும். செரியாமை, நீர்க்கட்டு, சளி, ஈளை, இருமல், இளைப்பு முதலிய நோய்களைத் தோற்றுவிக்கும்.இங்ஙனம், இந்நிறங்கள் சமநிலை கெடும்போது உடம்பில் பலவகை நோய்களை உருவாக்கும்.
மனித உடம்பு பருவுடம்பு, நுண்ணுடம்பு என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. பருவுடம்பும் அதன் உறுப்புகளும் அவற்றில் பரவியிருக்கும்
நிறங்களையும் முதலாகக் கொண்டே அவற்றினால் உண்டாகும் விளைவுகளும் இருக்கும்.நுண்பொருள்கள் பருப்பொருளின் முதலாகும். பருவுடம்பை இயக்குவது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பை இயக்குவது, உயிர். பருவுடம்பில் நோய் ஏற்பட்டால், அந்நோய் நுண்ணுடம்பையும் பாதிக்கும். நோய்கள், பருவுடம்பில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும். அதனால் பருவுடம்புக்கே மருத்துவம் காண்பார், பலர். பருவுடம்பில் காணக்கூடிய நோய்க்கு முதலாக இருப்பது நுண்ணுடம்பை அடைந்திருக்கும் நோயேயாகும். நுண்ணுடம்பிலுள்ள நோயை நீக்க எண்ணுவோர் ஒரே சிலரே.
நுண்டம்பின் நோயை நீக்கக் கூடியது நுண்ணிய முறைகளே. நுண்ணுடம்பு உயிரின் இயக்கத்தினால் இயங்குகிறது. உயிரின் வலிமையைக் கொண்டே நுண்ணுடம்பின் நோயை நீக்க முடியும். ஆகவே, உயிரின் வலிமையை வலுப்படுத்த வேண்டும்.உலகிலுள்ள ஆற்றல்கள் அனைத்தும் தட்பவெப்பங்களுக்குள் அடங்கும் என்றும் அவற்றின் நிறங்களெல்லாம் சிவப்பு நீலம் ஆகிய இரண்டினுள் அடங்கும் எனக் கண்டோம். தட்ப வெப்பங்களினால் உண்டாகக்கூடிய நோய்களைப் போக்குவதற்கான வழி, அவற்றின் நிறங்களை இடைவிடாது அகக்கண்ணால் கண்டு, நினைவில்
பதியச் செய்வதேயாகும்.உயிரல்லாத வெற்று நிறங்களை நினைப்பதனால், அவற்றை நினைக்கும் உயிரும் நுண்ணிய ஆற்றல் பெறாமலாகிவிடும். எனவே, வெற்று நிறங்களை நினைவில் எண்ணுவதால் எந்தப் பலனும் ஏற்படாது.
பேரறிவும், பேரருளும், பேராற்றலும் உடைய பேருயிரை பேருடம்பு உடையதாகக் கருதிக்கொண்டு, அந்த அருளுடம்பின் வலப்புறத்தில் செந்நிறமும் இடப்புறத்தில் நீல நிறமும் விளங்குவதைக் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு கண்டு கொண்டதை நினைவில் நிலைகுலையாது பதியவைத்துக் கொண்டால், கிடைத்தற்குரிய நன்மைகளும் நலன்களும் வந்து சேரும்.வெப்பமான செந்நிறத்தை உடம்பின் வலது புறத்திலும், குளிர்ச்சியான நீல நிறத்தை உடம்பின் இடது புறத்திலும் கண்டுநினைவை ஒரு நிலைப்படுத்தி வந்தால், இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா இன்பங்களும் பெறுவது எளியதாகிவிடும்.இதனையே மெய்ந்நூல்கள் ஆண் பெண் இணைந்த அம்மையப்பர் வடிவமெனக் கூறுகின்றன. இத்தகைய சிவப்பு, நீல நிற வழிபாட்டினால், நுண்ணுடம்பிலுள்ள நோய்கள் தீரும்.இதுவரை நிறங்களின் மூலத்தைக் கண்டோம். இனி, பிற நிறங்களின் பொதுக்குணங்களைக் காண்போம்.மனித உடலில் சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானவை ஏழு.