மிகவும் Softஆன இட்லி..முருகன் இட்லி கடை Websiteயிலேயே அவங்க Idly Recipeயினை வெளியிட்டு இருக்காங்க…
அதில், கடை இட்லி செய்முறையில், 2 கப்
இட்லி அரிசிக்கு 1 கப் உளுத்தம்பருப்பு என்ற Ratioவில் கொடுத்து இருந்தாங்க…
எனக்கு அந்த Ratioவில் இட்லி சரியாக வரவில்லை.
நான் 3 கப் இட்லி அரிசிக்கு 1 கப் உளுத்தம்பருப்பினை சேர்த்து
சேர்த்து செய்தேன். (இந்த Ratioவில் தான் நான் எப்பொழுது இட்லிக்கு மாவி
அரைப்பேன்…) அதே மாதிரி தான் இதற்கு அரைத்தேன்… நன்றாக இருந்தது…
அரிசி ஊறவைக்க : குறைந்தது 5 – 6 மணி நேரம்
மாவு புளிக்க : குறைந்தது 8 - 10 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· இட்லி அரிசி – 3 கப்
· உளுத்தம் பருப்பு – 1 கப்
· வேகவைத்த சாதம் – 1/2 கப்
· வெந்தயம் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· இட்லி அரிசி + வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி குறைந்தது 5 – 6
மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அதே மாதிரி உளுத்தம்பருப்பினை தனியாக சுமார் 4 மணி
நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
· ஊறவைத்த பொருட்களை கழுவி , அதில் இருந்து தண்ணீர் வடித்து
கொள்ளவும். ஊறவைத்த உளுத்தம்பருப்பு + 1/4 கப் குறைவான தண்ணீர் சேர்த்து மாவினை
மைய அரைத்து கொள்ளவும். இதனை தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.
· மீண்டும் மிக்ஸியில் அரிசி + வெந்தயம் + வேகவைத்த சாதம் + 1/4
கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
· இப்பொழுது இதனையும் பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் தேவையான அளவு
உப்பு (சுமார் 3/4
தே.கரண்டி அளவு) சேர்த்து கரண்டியினால் நன்றாக கலந்து கொள்ளவும்.
· கலந்து வைத்துள்ள மாவினை நன்றாக புளிக்கவிடவும்.
· புளித்த மாவினை இட்லிகளாக சூடவும். சூடான இட்லி ரெடி. இத்துடன்
சட்னி, சாம்பார், பொடி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.