Tuesday, 4 March 2014

அவசர சட்னி - Chutney - Side Dish for Idly and Dosa!!!

திடீர் விருந்தினர் வந்து இருக்காங்களாஅல்லது காலையில் டிபன் செய்ய லேட்டாகிட்டதாஇதோ 2 – 3 நிமிடங்களில் இந்த சட்னியினை செய்துவிடலாம்எதையும் வதக்க தேவையில்லைவேலையும் மிச்சம்.

எந்த பொருளையும் வதக்காமல் செய்வதால் caloriesயும் அதிகரிப்பதில்லைகொடுத்துள்ள அளவில் சட்னி செய்தால், வெரும் 100 – 110 calories தான் இருக்கும். அதனால், டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சட்னி இது…..

சமைக்க தேவைப்படும் நேரம் : 3 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தக்காளி – 1 பெரியது

பச்சை மிளகாய் – 3 (அல்லது) 4

கொத்தமல்லிசிறிதளவு

உப்புதேவைக்குகேற்ப

தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :

நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி

கடுகு – 1/4 தே.கரண்டி

பெருங்காயம்சிறிதளவு

செய்முறை :

v வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

v வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை மிக்ஸியில் போட்டு Pulse Modeயில் 2 – 3 தடவை விட்டுவிட்டு அரைக்கவும். (கவனிக்க : ஒன்றும்பாதியுமாக அரைக்கவும். மைய அரைத்துவிட வேண்டாம்.)

v அரைத்த கலவையுடன் கொத்தமல்லி + உப்பு சேர்த்து கலக்கவும்.

v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய அவசர சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :

இந்த சட்னியினை நல்லெண்ணெயில் தாளிப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையெனில் எண்ணெயினை சிறிது கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்.