Tuesday, 4 March 2014

1 நிமிடம் மைக்ரோவேவ் இட்லி & தக்காளி கார சட்னி - 1 Minute Microwave Idly / Tomato Kara chutney - Side Dish for Idly and Dosa !!!

மிகவும் எளிதில் 1 நிமிடத்தில் இட்லியினை செய்துவிடலாம்… இந்த இட்லி செய்ய எந்த வித Special இட்லி பாத்திரம் தேவையில்லை…எல்லா வித மைக்ரோவேவ் கிண்னங்களிலும் செய்யலாம்…



அவரவர் Microwaveயின் திறனை பொருத்து Time பார்த்து கொள்ளுங்க…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 நிமிடம்
தேவையான பொருட்கள் :
·         இட்லி மாவு
·         எண்ணெய் – Spray செய்து கொள்ள (விரும்பினால்)

செய்முறை :
Microwave கிண்ணத்தில் எண்ணெயினை Spray செய்து அதில் 1 கரண்டி இட்லி மாவு ஊற்றவும்.


அதனை Microwaveயில் 1 நிமிடம் வைக்கவும்.


இப்பொழுது சுவையான எளிதில் செய்ய கூடிய இட்லி ரெடி.


குறிப்பு :
எனக்கு இந்த இட்லி செய்ய 1 Minute 10 seconds தேவைப்பட்டது. இதுவே குட்டி கிண்னத்தில் சரியாக 1 நிமிடமே போதுமாக இருந்தது.

தக்காளி கார சட்னி

இந்த சட்னியில் மிளகாய் தூளினை சேர்க்காமல், காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்…மிகவும் காரசராமாக இருக்கும்… நன்றி Prema…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2
·         காய்ந்த மிளகாய் – 5 – 6
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

 முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க

செய்முறை :
வெங்காயம் , தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.


கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி + உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


காய்ந்த மிளகாயினை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொண்டு அதனை சட்னியில் சேர்த்து நன்றாக வதக்கவும்.




சுவையாக தக்காளி கார சட்னி ரெடி.