பாகற்காயினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,
• சக்கரை நோயளிகளுக்கு மிகவும் நல்லது. சக்கரையின் அளவினை காட்டுபடுத்துகின்றது.
• பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தினை சுத்தம் செய்கின்றது.(Blood Purifier)
• புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
• உடல் எடையினை குறைக்க விரும்புவோர்
இதனை சாப்பிடுவதால்
நல்ல பயன் கண்டிப்பாக கிடைக்கும்.
• நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.
பாகற்காயில் அதிக அளவு Iron, விட்டமின்ஸ் ஏ, பி, சி (Vitamins A, B6, C) , நார்சத்து(Dietary Fibre)இருக்கின்றது. இதில் குறைந்த அளவு கொலஸ்டிரால்
இருக்கின்றது. 100 கிராம் பாகற்காயில், சமைத்தபின்னர் சுமார் 25 – 30 கலோரில் தான் இருக்கின்றது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பாகற்காய் – 1/4 கிலோ
· வெங்காயம் – 1 பெரியது
· தக்காளி – 1
· பூண்டு – 10 பல் தோல் நீக்கியது
முதலில் தாளிக்க :
· நல்லெண்ணெய் – 2 மேஜைகரண்டி
· கடுகு, வெந்தயம் – தாளிக்க
· துவரம் பருப்பு – 1/4 தே.கரண்டி
· சோம்பு – 1/4 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் - 1
தே.கரண்டி
· தனியா தூள் – 1 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· வெங்காயம் + தக்காளியினை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பாகற்காயினை மிகவும் சிறிய வட்ட துண்டுகளாக வெட்டி வைக்கவும். (கவனிக்க : பாகற்காயில் பெரிய விதைகள் இருந்தால் அதனை நீக்கிவிடவும்.
பிஞ்சு விதைகள் இருந்தால் அப்படியே சேர்த்து கொள்ளலாம்.)
· கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து
தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
· இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
· பிறகு பாகற்காயினை சேர்த்து நன்றாக 4 – 5 நிமிடங்கள் வதக்கவும்.
· தக்காளியினை இதில் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி
கொள்ளவும்.
· தக்காளி வதங்கிய பிறகு, அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள்
சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
· இத்துடன் கரைத்த புளி சேர்த்து சுமார் 8 – 10 நிமிடங்கள் நன்றாக
கொதிக்கவிடவும். (உப்பின் அளவினை சரி பார்த்து கொள்ளவும்.)
· கடைசியில் கொத்தமல்லி, கருவேப்பில்லை தூவி குழம்பினை
கிளறிவிடவும். சூடான சாதம், தயிர் சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.