தேவையான பொருட்கள் :
- ரவை - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- இஞ்சி - சிறிது
- கறிவேப்பிலை -சிறிது
- பெருங்காயம் - சிறிது
- முந்திரி - 8
- நெய் -6 ஸ்பூன்
- உப்பு - 3 /4 ஸ்பூன்
செய்முறை :
- குக்கரில் பாசிபருப்பு போட்டு வறுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து கிளறவும்.
- ரவை பொன்னிறமாக வறுத்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் வெந்த பாசிபருப்பு சேர்த்து கிளறவும்.
- பின் வறுத்துவைத்த ரவை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
- இன்னொரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடானதும் கருவேப்பிலை, சீரகம்,
மிளகு, இஞ்சி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பெருங்கயத்தூள் சேர்த்து
வதக்கி பொங்கல் மீது கொட்டி கிளறவும். - பின் அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு முந்தரி வறுத்து பொங்கலுடன் சேர்த்து தேங்காய் சட்னி, சாம்பார்டன் பரிமாறவும்.
குறிப்பு :
ரவையை போட்டு கிளரும் பொது அடுப்பை சிறுதீயில் வைத்து கிளறவும்.