Tuesday, 4 March 2014

வெங்காயம் கார சட்னி!!!

இந்த சட்னி பெயருக்கு எற்றாற் போல மிகவும் காரமாக சுவையாக இருக்கும்.
இந்த சட்னியினை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இது என்னுடைய மாமியாரின் ஸ்பெஷல் சட்னி. 

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கொஞ்சம் எண்ணெயினை அதிகமாக சேர்த்து கொடுக்கவும்
.

இதனை இட்லி
, தோசை, தயிர் சாதம்,கலந்த சாதம் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள்:
v  வெங்காயம் – 1
v  காய்ந்த மிளகாய் – 12 – 15 மிளகாய்
v  எண்ணெய் – 1 தே.கரண்டி
v  புளி – 1/4 தே.கரண்டி
v  உப்பு – 3/4 தே.கரண்டி
தாளிக்க:
v  நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
v  கடுகு – 1/2 தே.கரண்டி
v  கருவேப்பில்லை – 4 இலை
v  பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி
செய்முறை :
       வெங்காயத்தினை சிறய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
       கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
       பின்பு 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
       பிறகு வெங்காயம்+காய்ந்த மிளகாய்+ புளி +உப்பு சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.( தேவை எனில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்).

       தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அரைத்த கலவையில் சேர்த்து கலக்கவும். சுவையான வெங்காயம் கார சட்னி ரெடி.