Monday, 3 March 2014

மோதிரம் அணிவது ஏன்!!!

மோதிரம் அணிவது ஏன்?




விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விர லில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது
நடு விரல் உங்களை குறிக்கிறது
மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பழையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்களில் மோதிரம் அணிறோம்.