Monday, 24 March 2014

21 வகையான மூலநோய்கள்!!!

                                                                                                                                                                                               21 வகையான மூலநோய்கள்      


 1. நீர் மூலம்:- தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.

2. செண்டு மூலம்:- ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும்

இவைகள் குணமாக முள்ளிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும்.
 


3 முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.                                           

4. சிற்று மூலம்ஆசன்ப்பகுதியில் சிறுமுளைகள் உண்டாகும்.                  

5. வறள் மூலம். அதிக வெப்பத்தாள்   உடல் உலர்ந்து ஆசனவாயினின்று இரத்தம் வெளிப்படும். வாழப் பழத்தில் சீரகப் பொடிஉஐக் கலந்து உண்டுவரக் குணமாகும்.       

6.இரத்த மூலம். ஆசன வாயிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுச் சோகையினால் கண்கள் மஞ்சளாகத் தோன்றும்/ வாழைப்பழச் சாற்றில் சீரகப் பொடியைக் கலந்துண்ணச் சரியாகும்.

7.சீழ் மூலம். உடல் வெளுத்து ஆசனவாயிலிருந்து சீழூம் நீரும் வெளிப்படும்.

8. ஆழிமூலம். ஆசனவாயில் வள்ளிக்கிழங்குபோல் ஒருமுளைதோன்றிச் சீழும் இரத்தமும் வெளிப்படும்.

9. வாதமூலம். ஆசனவாயில் வாதுகைப் பூ போன்ற முளை வளர்ந்து குடல் வலி, தலைவலி ஆகியவற்றுடன் வெண்மையான மலம் வெளிப்படும்.

10. தமரக மூலம். ஆசன வாயில் தாமரைப்பூ போன்று தோன்றி இரத்தம் வெளிப்படும்.                

11. ஆசன வாயில் நெல் அல்லது பருத்து விதை போன்ற முளை உண்டாகி மலகம் இறுகி இரத்தத்துடன் சிறிது சிறிதாக வெளிப்படும்.

12. சிலேத்தும மூலம். உடல் வெளுத்து ஆசனவாயில் வெண்மையான முளை தோன்றும்

13. தொந்த மூலம். ஆசனவாய் குறுகிச் சிவந்து விரிந்து முளை தோன்றும் 

14. வினைமூலம். உணவு செரிக்காமல் அடி வயிற்றில் வலி ஏற்படும்புளியங்கொட்டையின் மேல்தோலை அரைத்துப் ப்பசுவின் பாலில் ஐந்து நாள் கொடுக்கக் குணமாகும்.

15.மேக மூலம். ஆசனவாயிலிருந்த்கு இரத்தமும், சிறுநீரில் சர்க்கரையும், வெளிப்படும். வட்டத் துத்தியிலைச் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

16. பவுத்திர மூலம். ஆசனவாயில் கட்டி உண்டாகி சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.  

17. கிரந்தி மூலம். மலம் வறண்டு இரத்தத்துடன் ஆசனவாய் வெடிக்கும்படி வெளியேறும். ஈருள்ளிச்சாறு, பசுவின்பால், ந்ய் ஆகியவற்றில் அதிமட்குரத்தக் கலந்து கொடுக்கக் குணமாகும்.

18. குத மூலம். ஆசன வாயில் மூங்க்லில் குருத்துப்போல ஒரு முளை வெளிப்பட்டு இரத்தம் வெளியாகும்   

19. புற மூலம். ஆசன வாயில் சீழும் பருப்புப் போனேஅ முளையும் உடலெங்கும் சிறங்கும் தோன்றும்.

20.கருக்கு மூலம். மலவாய் சுருங்கி, உடல்வெளுத்துக் குடல்வலியுடன் இரத்தமும் சீழும் வெளிஒப்படும்.

21.சவ்வு மூலம்அடிவயிற்றில் மூலம் மிகுதியாகி ஆசன வாயில் சவ்வுபோலச் சுற்றிச் சீழும் நீரும் கசியும்.  ( முல்லை. பி.எல். 1990 : 38 ) 

ஆவாரங்கொழுந்து , பூ, பட்டை, அறுகம் வேர் இவைகளைச் சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து  பசுவின் நெய்யில் 48  நாட்கள் உட்கொள்ள ஆசனவாயுள் கரைந்துபோகுஇம்


குறிப்பு:- 

 மேற்குறிப்பிடப்பட்டுள்ள 21 வகை மூலநோய்களுக்கும் தனித்தனியான மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், கட்டுரையின் சுருக்கம் கருதி எளிமையான சில முறைகள் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன.

மூல நோய்க்குரிய பொதுவான சில மருந்துகள்.

பிரண்டைக் கொளுந்தை அல்லது நாயுருவி இலையை அரைத்தது நல்லெண்ணெயைக் கலந்து ஏழு நாட்கள் இருமுறை உட்கொள்ள மூல நோய் குணமாகும்
  சாம்பார் மேலே ஒரு சுவையும் நடுவில் ஒரு சுவையும் கடைசியில் சாப்பிடுபவர்க்கு ஒரு சுவையும் தரும் காரணம் அது குழம்பாக இல்லாமல் அதிக நீர் சேர்க்கப்படுவதால் பருப்பு வாயுத் தொல்லைகளை உருவாக்க காரணமாகிறது. சாம்பாரை விரும்புவோர் பருப்பை வேகவைக்கும் போதே சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்தால் நலம்.
 உள் மூலமானது முதிர்ந்து பவுத்திரமாக மாறுகிறது. ”பவுத்என்ற வட சொல்லுக்குத் துளை என்பது பொருள். பவுத்திர நோய் தோன்றுகையில் ஆசனத் துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறிசிறு துளைகள் தோன்றி அதனின்று நாற்றமுள்ள நீர் வெளிவரும்.

இதற்குரிய மருத்துவம் செய்யாவிடில் ஆசனத் துளையின் உட்புறம் சவ்வு போலவும், பலூன் போலவும், ஏராளமாகச் சதை வளர்ச்சி தோன்றி அவற்றில் துளைகள் ஏற்படும். பிறகு ஆசனத் துளை அருகில் வலியற்ற ஒரு கொப்புளம் ஏற்படும். இது நாட்பட்ட நிலையில் உடைந்து வெளியேறும். மீண்டும் இது கொப்புளமாக மாறும். பவுத்திர நோய் முதிர்ந்த நிலையில் இத்துளை வழியாகச் சீழுடன் இரத்தமும் வெளிப்படும்
 பெருங்குடலில் ஏற்படும் சக்தி குறைவால் வரும். ஆசனவாய்ப் பகுதி அதிக சூட்டால் விரிவடைந்து அடைத்துக் கொள்ளும் போதும் மலம் வெளியேறுவது கடினம். வலியின் காரணமாக மலத்தை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். கழிக்கும் தொட்டியில் நன்கு ஒட்டும் நிலையில் மலம் இருப்பின் மலச்சிக்கல் உள்ளதென அறியலாம்.
 வளி நோய்களை நீக்குவதுடன் சீரணத்துக்கு உதவும்.
சுக்கின் தோல் நஞ்சு அதைநீக்கி சுண்ணாம்பை பூசி வெயிலில் காயவைத்து பின் சுண்ணாம்பைத் தட்டி நீக்கிவிட்ட பொடிசெய்து வைத்துக் கொள்க.
 மிளகு குளிர்ச்சி தரும். நஞ்சை முறிக்கும். சளி நீக்கும். வலி நீக்கும்.
 பெருங்குடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதோடு பசை பெருங்குடலின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு அதன் இயக்கத்துகுத் தடையாகும்.
 மன இறுக்கம் மலச்சிக்கலை உருவாக்கும்,
 புத்தரின் தியான முறைகளில் ஒன்று. எதையும் சாராது மையத்தில் இருக்க உதவும் முறை. விழிப்புணர்வுடன் கவனிக்கும் தன்மையை அளிக்கும் இந்த பயிற்சி.
தினமும் அமைதியாக வசதியாக அமர்ந்து மூச்சை கவணித்தல் வேண்டும். மூச்சை கூட்டவோ, குறைக்கவோ, அடக்கவோ செய்யாது வெறுமனே கவனிக்கும் பயிற்சி. இவ்வாறு பயின்றவர் எல்லாவற்றையும் தன் மையத்திலிருந்து சலனமின்றி கவனிக்க கற்கிறார்.