Friday, 28 February 2014

திதி


திதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
எண்
கிருஷ்ண பட்சம்
சுக்கில பட்சம்
தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1
பிரதமை
முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2
துவி்தியை
இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3
திருதியை
கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4
சதுர்த்தி
நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5
பஞ்சமி
இது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6
சஷ்டி
நாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7
சப்தமி
சூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8
அஷ்டமி
இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9
நவமி
அம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10
தசமி
தர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11
ஏகாதசி
மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12
துவாதசி
மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13
திரயோதசி
மன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14
சதுர்த்தசி
காளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15
அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்
Posted