Tuesday 25 February 2014

மோர் குழம்பு ரெடி!!!

எளிதில் செய்ய கூடிய மோர் குழம்பு ரெடி. இதில் தேங்காய் சேர்க்க தேவையில்லை. வெங்காயம் + தக்காளி + பூண்டு + இஞ்சியினை கொரகொரப்பாக அரைத்து வதக்கி செய்யும் குழம்பு இது. வீட்டில் செய்யும் மோர் குழம்பு எப்பொழுது வடை சேர்த்து தான் செய்வாங்க…
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        தயிர் – 2 கப்
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
 கொரகொரப்பாக அரைக்க :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1 Medium Size
·        பூண்டு – 5 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு
 ஊறவைத்து மைய அரைத்து கொள்ள :
·        அரிசி – 1 மேஜை கரண்டி
·        துவரம் பருப்பு – 1 மேஜை கரண்டி
·        பச்சைமிளகாய் – 3
·        சீரகம் – 1 தே.கரண்டி
 முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        கடுகு – 1/4 தே.கரண்டி , காய்ந்த மிளகாய் – 2
 செய்முறை :
·        அரிசி + துவரம் பருப்பினை 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பூண்டு + இஞ்சியினை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
·        ஊறவைத்த பொருட்கள் + சீரகம் + பச்சைமிளகாய் சேர்த்து மைய அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். 
·        தயிர் + மஞ்சள் தூள் + பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.  
·        இத்துடன் 3 கப் தண்ணீர் + பெருங்காயம் + அரைத்த அரிசி விழுது + உப்பு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் கொரகொரப்பாக அரைத்து பொருட்கள் சேர்த்து நன்றாக சிறிய தீயில் வதக்கி கொள்ளவும். 
·        வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, கரைத்து வைத்துள்ள கலவையினை சேர்த்து ஒரு கொதி வரும் வேகவிடவும். 
·        வடைகள் சூட்டு சூடான குழம்பில் போட்டு ஊறவிடவும். 
·        கடைசியில் கருவேப்பில்லை + கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.