Wednesday 26 February 2014

மெது பகோடா!!!


எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக் இது… பொதுவாக இதில் Butterயிற்கு பதிலாக
Dalda தான் சேர்ப்பாங்க… ஆனால் நான் இதில் வெண்ணெய் சேர்த்து இருக்கிறேன்.

அதே மாதிரி மாவினை கலந்தவுடன் பகோடா செய்வது மிகவும் நல்லது. அப்பொழுது தான் அந்த பக்குவம் சரியாக இருக்கும். அதனால் பகோடா சூடும் பொழுது மாவினை கலக்கவும்.

மிகவும் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இல்லாமல் மாவினை கலந்து கொள்ளவும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் மாதிரி காரத்திற்கு பச்சைமிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும். கண்டிப்பாக பூண்டு சேர்த்தால் மிகவும் வாசமாக இருக்கும்.


தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கடலைமாவு – 2 கப்
·        அரிசி மாவு – 3/4 கப்
·        வெங்காயம் – 2
·        எண்ணெய் – பொரிப்பதற்கு
கவனிக்க : அரிசி மாவினை அதிகம் சேர்க்க தேவையில்லை. 1/2 கப் – 3/4 கப் அளவு சேர்த்தால் போதுமானது.

கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
·        பூண்டு – 5 பல் தோலுடன்
·        பச்சைமிளகாய் – 2 – 3 (காரத்திற்கு ஏற்ப)
·        கொத்தமல்லி – சிறிதளவு
கவனிக்க : விரும்பினால் இதனையும் அரைக்காமல் பொடியாக நறுக்கியோ அல்லது நசுக்கி கொண்டோ சேர்த்து கொள்ளலாம்.

முதலில் கலத்து கொள்ள :
·        வெண்ணெய் – 2 மேஜை கரண்டி (Room Temperature Butter)
·        Baking Powder – 1/4 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        சூடான எண்ணெய் – 1 மேஜை கரண்டி (Optional)

செய்முறை :
·        வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து கொள்ளவும்.

·        முதலில் கலந்து கொள்ள கொடுத்துள்ள பொருட்களை நன்றாக 1 நிமிடம் கலக்கவும்.

·        இத்துடன் வெங்காயம் + அரைத்த விழுதினை சேர்த்து கலக்கவும். ·        பிறகு, கடலை மாவு +அரிசி மாவினை சேர்த்து நன்றாக கலக்கவும்.                                     

   ·        இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். (கவனிக்க : அதாவது மாவினை உருட்டினால் உருண்டையாக வர வேண்டும். அதே மாதிரி உதிர்த்தால் மாவு திரும்பவும் உதிர வேண்டும். அந்த பதத்தில் அதனை கலக்க வேண்டும். )           

·   .     இதனை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சூடான எண்ணெயில் உருட்டிய உருண்டைகளை போட்டு நன்றாக சுமார் 4 - 5 நிமிடங்கள் வேகவிடவும்.            

·        மொரு மொருப்பான மெது பகோடா ரெடி. வெளியில் Crispyயாகவும் உள்ளே பொல பொலவேனெ உதிரும் வகையில் Softஆக  இருக்கும் மெது பகோடா ரெடி.