Wednesday, 26 February 2014

சரவணபவன் ஹோட்டல் சாம்பார்!!!

நீங்கள் பல வகை சாம்பார் சாப்பிட்டு இருப்பிங்க...ஒரு முறை இந்த சாம்பாரினை சாப்பிட்டால் திரும்ப திரும்ப அதே சாம்பாரினை தான் செய்வோம்...அவ்வளவு அருமையாக ருசியாக இருக்கும்.

சரவணபவன் ஹோட்டல் சாம்பார் மிகவும் பிரபலம். அதிலும் இந்த சாம்பாரினை சாதத்துடன் சாப்பிடுவதை விட இட்லி, தோசை, பொங்கலுடன் போன்ற சிற்றுண்டியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சாம்பாரில் வேண்டுமானால் கத்திரிக்காய், முருங்கைக்காய், செள செள போன்றவை சேர்த்து சமைக்கலாம்.

எங்களுடைய வீட்டில் அனைவருக்கும் சரவணபவன் ஹோட்டல் சாப்பாடு என்றால மிகவும் விருப்பம். அதிலும் இந்த சாம்பாரின் சுவையே தனி தான்...

இந்த சாம்பார் செய்வது மிகவும் எளிது. அதனுடைய செய்முறையினை இப்பொழுது பார்ப்போம் வாங்க...

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ துவரம் பருப்பு – 1 கப்
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 1
§ உப்புதேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
§ தக்காளி – 1
§ பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ தனியா தூள் – 1 தே.கரண்டி
§ தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
கடைசியில் தாளித்து சேர்க்க :
§ எண்ணெய் – 2 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ வெந்தயம் – 1/4 தே.கரண்டி
§ சீரகம் – 1/2 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ வெங்காயம் – 1
§ கருவேப்பில்லை – 4 இலை
§ பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
செய்முறை :
v வெங்காயம் + தக்காளியினை பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு +3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியினை பிரஸர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
v அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தயையும் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
v விசில் அடங்கியதும் பிரஸர் குக்கரினை திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியினை நன்றாக மசித்து கொள்ளவும்.
v அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
v ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
v இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

v கடைசியில் கொத்தமல்லி தூவி களறிவிடவும். இந்த சாம்பாரினை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.