தஞ்சை நெய் பொங்கல்
இந்த பொங்கலை சமைத்து உண்டு பாருங்கள் உங்களுக்கும் புகழாரம் கிடைக்கும்.
பசு நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான பாசிபருப்பை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வீடுகளில் சமைத்து இதனுடன் வேர்கடலை தேங்காய் சட்டினி மற்றும் பாசிபருப்பு சாம்பார் உடன் சேர்த்து சமைத்து பாருங்கள் உங்கள் நாக்கு உச்சுகொட்டி கொண்டே சாப்பிடும் , ருசியின் களிப்பில் திளைத்து இருப்பீர்கள் !!!!
.
தேவையான பொருட்கள்
புது பவானி பச்சரிசி 1 கப்
பாசிபருப்பு 1/2 கப்
முழு முந்திரி பருப்பு 18
பச்சை நிற மிளகாய் 3 ( விழுதாக மையாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி துருவல் 3/4 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
குரு மிளகு 1 1/2 தேக்கரண்டி ( அம்மிகல்லில் ஒன்றுக்கு இரண்டாக நசுக்கியது)
கறிவேப்பில்ல கொஞ்சமாக
தண்ணீர் தேவையான அளவு
உப்புத்தூள் தேவையான அளவு
பசுநெய் 4 மேஜைக்கரண்டி + 3 மேஜைக்கரண்டி + 2 தேக்கரண்டி ( உருக்காத கெட்டியான தன்மை உடையது )
செய்முறை
1. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் அரிசி மற்றும் பாசிபருப்பை போட்டு நன்றாக சிறுதீயிலே மூன்று நிமிடங்கள் வரை வறுக்கவும்.
2. பிறகு அதில் 2 தேக்கரண்டி பசு நெய் விட்டுகோங்க நன்றாக சிறுதீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
3. இப்பொழுது பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டும் , 1 1/2 கப் அரிசி மற்றும் பாசி பருப்பிற்கு 10 கப் தண்ணீர் சேர்த்துகோங்க இதனுடன் நன்றாக நசுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி துருவல் , நசுக்கிய மிளகு மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க.
4. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக 6 விசில் வரை விட்டுகோங்க நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் நன்றாக குழைய குழைய இருக்க வேண்டும் பொங்கல் கொஞ்சம் தழைய தழைய இருக்க வேண்டும்.
5. இப்பொழுது அகன்ற கெனமான வடச்சட்டியில் மீதமுள்ள 4 மேஜைக்கரண்டி பசுநெய்யை விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்துகோங்க நன்றாக பொறிய ஆரம்பித்தவுடன் அதில் கறிவேப்பில்ல மற்றும் முந்திரி பருப்பை சிறுதீயிலேய பொன்னிறமாக வறுத்து அதனுடன் சிறிய சிட்டிகை பெருங்காயம் சேர்த்துகோங்க நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
6. பிரஷர் குக்கரின் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் அதில் பசுநெய் கலவையை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.
7. இப்பொழுது மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி பசுநெய்யை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய கிளற வேண்டும்.
Saturday 12 January 2019
Ghee Pongal!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment