வீட்டில்_ஒற்றுமை_இல்லையா?
#மன_அமைதியில்லையா?
********************************
வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்.
வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை.
ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .
வெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் இருப்பார்ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது.
''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள்.
வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.
வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்? அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.
வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார்.
ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். குடும்பத்தில் குலதெய்வ பலம் கூடும் குறைகள் அணைத்தும் தீரும் இனி குடும்பத்தில் குதூகலம்தான்.
Friday, 11 January 2019
For Peace in the House!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment