டிப்ஸ் : -டிப்ஸ்
பால், உணவு பாத்திரங்களில், அடி பிடித்து விட்டால், (அது தான் அடிக்கடி பிடிக்குமே....!!!!)
அதே பாத்திரத்தில் வெங்காயத்தை சிறிது போட்டு, நீர் ஊற்றி வேக வைத்தால் கறை போய் விடும்...
(லெமன் கூட போட்டும் வேக வைக்கலாம்)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்தில் கால் பகுதிக்கு, வெள்ளை சாதம் போட்டு அரைக்கவும்.
இதனால் இட்லியின் சுவை கூடும். மிருதுவாகவும் இருக்கும்.
(அவல் போட்டும் அரைக்கலாம்...)
இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,கறிவேப்பிலை,
மிளகு,ஜீரகம் இவற்றை மிக்சி யில் போட்டு அரைத்து,
ரவா தோசை மாவில் கலந்து கடுகு,உளுந்து தாளிச்சு தோசை வார்த்தால்
அப்புடியே சாப்பிடலாம்.
தொட்டு கொள்ள ஒன்றுமே வேண்டாம்....
(இப்புடிக்கு ரவா தோசை பைத்தியம்...)
புழுங்கல் அரிசி :- 4 ஆழாக்கு
வெந்தியம் - 2 டீ ஸ்பூன்
ஊற போட்டு, மறு நாள் அரைத்து,
தேங்காய் துருவல், உப்பு,பெருங்காயம் மாவுடன் கலக்கவும்.
தோசை கல்லில் ஊற்றி, ஓரங்களில் என்னை போட்டு மூடி விடவும்.
இதை திருப்பி போட வேண்டாம்....
(ஆப்பம் போன்ற சுவையில் அருமையான தோசை...)
எண்ணெய் அதிகம் செலவு ஆகாமல் , தோசை அம்மா தோசை....
மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் அரைத்து
சேர்த்து, அதில் சப்பாத்தி மாவை பிசைந்தால்,
வித்தியாசமான சுவையில் இந்த மிர்ச்சி சப்பாத்தி இருக்கும்.
இது அஜீரணத்துக்கும் நல்லது.
வாழை தண்டினை பொடியாக நறுக்க எளிதான வழி
பெரியதாக நறுக்கி, மோர், உப்பு, மஞ்சள் போடி போட்டு
சாதம் பிசைவது போல நன்றாக பிசைந்து விட்டால்
வாழைத்தண்டு போடி பொடியாக ஆகி விடுமே....
நாரும் பிரிந்து விடும்...
கோதுமை அல்வா செய்யும்போது கடைச்யில் கொஞ்சம் ரெண்டு சொட்டு பாதாம் எஸ்சென்ஸ்
விட்டால் பாதாம் அல்வாவை போல கம கம smell (manam) தூக்கும்.
மைசூர் பாகு,தேங்காய் பர்பி போன்றவைகளை தயாரிக்கும் போது
சமையல் சோடா போட கூடாது... சோடா உப்பு சேர்த்தால் வில்லைகள் போடா வராமல், தூள் தூளாக உதிர்ந்து விடும்..
ரவா லட்டு, பொட்டுகடலை லட்டு செய்யும் போது மொத்த மாவு
அளவில் கால் பங்கு பசும்பால் கலந்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
காரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவை செய்யும் போது,
கொஞ்சம் milk maid ஊற்றி கிளறினால் அல்வா நல்ல மனமாகவும்,
ருசியாகவும் இருக்கும்.
பஜ்ஜி செய்யும் போது காரம் அதிகம் இருக்க கூடாது என்று
நினைப்பவர்கள் அதில் உப்புடன் சிறிதளவு ஓமம் அரைத்து விட்டு செய்தால் சுவையாக இருக்கும்.
அதிரச மாவு மீந்து விட்டால், அந்த மாவுடன் தேங்காய் பால் சேர்த்து கரைத்து பணியாரமாக எண்ணையில் ஊற்றி எடுத்தால், சுவையான் பணியாரம் தயார் !
குலாப்ஜாமூன் செய்யும் போது jeera meendhu விட்டால், முறுக்கு செய்து,
சிறிது சிறிதாக உடைத்து ஜீராவில் போட்டு அடுப்பில் வைத்து
இரண்டு நிமிடங்கள் கிளறி எடுத்தால் இனிப்பு முறுக்கு தயார்.
வாடி போன கொத்து மல்லி தழையை
வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால்
புதியது மாதிரி ஆகி விடும்.
Wednesday, 23 January 2019
சமையல்,-Cooking Tips!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment