Thursday 10 January 2019

காபி-ஆரோக்கியமான காலை காபி!!!

#ஏழு_நாள் ☕ #ஏழு_காபி ☕ ஏராளமான பலன்கள்..! ஏழு விதமான ஆரோக்கிய தகவல்கள் இதோ... 🌺🌸
காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர்.
கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை.
காபி கொடுத்து விருந்தினரை உபசரிப்பதில் தொடங்குவது, நம் விருந்தோம்பல் பண்பாடு.
உற்சாகமூட்டும் பானம் என்பதையும் தாண்டி, இதற்கெனவே சில மகத்துவங்கள் உண்டு.
உடலில் எனர்ஜி லெவலை அதிகரிக்கும்; கொழுப்பைக் குறைக்கும்; அல்சைமர், டிமென்ஷியா பிரச்னைகளில் இருந்து காக்கும்... என பெரிய பட்டியலே போடுகிறார்கள் மருத்துவர்கள்.
வழக்கமான காபியைத் தாண்டி சில ஆரோக்கியமான வகைகளையும் அருந்தலாம்; அவற்றையும் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஏழு நாள்... ஏழு காபி... என வாரம் முழுக்க அருந்த அருமையான வகைகள்... அவற்றைச் செய்யும் முறைகள்... பலன்கள்!
#கருப்பட்டிகாபி 🌺🌸
தேவையானவை:
கருப்பட்டி - 1/4 கப், 
காபித்தூள் - 2 டீஸ்பூன்.
#செய்முறை :முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும். அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.
#பலன்கள் :சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
#தாமரைப்பூ_காபி 🌺🌸
தேவையானவை :வெண்தாமரை அல்லது செந்தாமரை - 1, 
மிளகு - 5, 
கிராம்பு -2, 
ஏலக்காய் - 2, 
பால் - 1/4 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
#செய்முறை :இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும்போது கிராம்புப் பொடி, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவுக்கு வந்ததும் அதை வடிகட்டவும். அதில் பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும்.
#பலன்கள் :ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது, புற்றுநோய் வராமல் காக்க்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
#செம்பருத்திப்பூ_காபி 🌺🌸
தேவையானவை: செம்பருத்திப் பூ - 1, 
ஏலக்காய் - 2, 
கிராம்பு - 2, 
மிளகு - 5, 
பால் - 1/2 கப், 
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
#செய்முறை :செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிடவும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்துச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகவும்.
#பலன்கள் :செம்பருத்திப்பூவில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பலமாக்கும். சருமத்தைப் பாதுகாக்கும்.
#சுக்கு_காபி 🌱🍃
தேவையானவை:
சுக்கு - 1 அங்குலத்துண்டு, ஏலக்காய் - 2, 
பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப்.
#செய்முறை :சுக்கு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். மாலையில் பருக ஏற்ற பானம்.
#பலன்கள் :கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
#பேரீச்சம்_விதை_காபி 🌺🌸
தேவையானவை:
பேரீச்சை விதைப்பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.
#செய்முறை :பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.
#பலன்கள் :பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும். இது ரத்த உற்பத்திக்கும் தாது உற்பத்திக்கும் உதவக்கூடியது. சருமத்தைப் பாதுகாக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும்.
#முருங்கைப்பூ_காபி 🌱 🌺🌸
தேவையானவை :
முருங்கைப்பூப் பொடி - 1 டீஸ்பூன், 
பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி - 1 டீஸ்பூன்.
#செய்முறை :முருங்கைப் பூவைச் சுத்தம்செய்து உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடியையும் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.🌱🍃
#தேங்காய்_எண்ணெய்_காபி ☕ ☕
தேவையான பொருட்கள்
சூடான காபி – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை :உங்கள் டம்ளரில் உள்ள சூடான காபியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குடியுங்கள். தினசரி நன்மைகளால் பயனடையுங்கள். இவ்வளவு ஈஸியா ஒரு நல்ல ஆரோக்கியமான காபி குடிக்க முடீயும்னா அப்புறம் எதுக்கு தயக்கம். தினமும் குடிங்க. ஆரோக்கியமா இருங்க…ஷ...ரு🌱
என்றும் ஆரோக்கியமான தகவல்கள் என்றும்

No comments: