Sunday, 20 January 2019

இடி சாம்பார்!!!

நெல்லை #இடி #சாம்பார் ..
#தேவையான #பொருள்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம் 
கத்தரிக்காய் - 2 
முருங்கைக்காய் - 1 
மாங்காய் - 1 
சின்ன வெங்காயம் -10 
புளி - சிறிதளவு 
மஞ்சள்தூள,பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் 
தேங்காய் - 2 பத்தை 
எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு 
கடுகு,கறிவேப்பிலை - தேவையான அளவு

#அரைக்க:
வெந்தயம் ,உளுந்து,சீரகம், தனியா,தலா 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2 
சிறிது எணெணெயில் வறுத்து அரைக்கவும்.
#செய்முறை:
துவரம்பருப்புடன் ,மஞ்சள்தூள,பெருங்காயத்தூள்சேர்த்து வேக வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை போட்டு வேக வைத்து வெங்காயம்,புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு பருப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
இதனுடன் அரைத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.கம,கம சாம்பார் ரெடி.

No comments: