Thursday, 24 January 2019

For Sagged Breasts!!!

பெண்களுக்கு தொங்கும் மார்பகங்கள்: சரி செய்ய எளிய வழி
தற்போது பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை என்ன வென்றால், தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனைக்கு அவர்கள் தங்களது உணவு முறை மூலமே எளிய முறையில் தீர்வு காணலாம்.
பெண்களுக்கு முகம் தான் முதலில் அழகு. பின்பு அவர்களது மார்பகம். பெரும்பாலன ஆண்கள் பெண்களின் அழகை முதலில் வர்ணிப்பது அவர்களது மார்பகங்களை வைத்துதான். இதனால் பெண்கள் தங்களது முகஅழகிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் தங்களது மார்பகத்திற்கும் கொடுக்கின்றனர்.
தற்போது, இளம் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு தொங்கும் மார்பகங்கள் தான் பிரச்சனை. பெரிய அளவில் மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு இளமையில் இன்பமாக இருக்கும். ஆனால், நாளாக அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக வளர்வது இந்த தொங்கும் மார்பகங்கள்.
இது போன்று மார்பகங்கள் பெரியதாக உள்ள பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அணிய முடியும்.
பெண்களுக்கு மார்பங்கள் தொங்குவது குறித்து, பாலியல் டாக்டர்களிடம் கருத்து கேட்ட போது அவர்கள் நம்மிடம் கூறியதாவது:-
சரியான உள்ளாடைகளை அணியாத காரணம், ஊட்டச்சத்து இன்மை, மாதவிடாய் பிரச்சனை, போன்ற பிரச்சனைகள் மூலமே மார்பகங்கள் தொங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
தொங்கும் மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்யதால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டும். எனவே, அதை தவிர்க்க வேண்டும். ஆனால், தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம்.
பெண்களின் உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை நிச்சயம் தளரச் செய்யும். இதனாலும் பெண்கள் மார்பகங்கள் தொங்கலாம்.
எனவே, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலே தொங்கும் மார்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
குறிப்பாக, பெண்கள் தங்களது உணவில், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தாலே மார்பகங்களை அழகாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.
தங்களுக்கு எடுப்பான மார்பங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். நல்ல எடுப்பான மார்பங்கள் உள்ள பெண்களையே ஆண்களும் அதிக அளவில் ரசிக்கின்றனர்.
எனவே, பெண்கள் தங்களை மட்டும் அழகாக வைத்துக் கொள்ளாமல், மேற்கண்ட இயற்கையான உணவுகள் மூலம் தங்களது மார்பங்களையும் மிக அழகாக வைத்தக் கொள்ள முடியும்.
மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

No comments: