Friday, 29 March 2013

பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள்:

பயனுள்ள வீட்டுக்குறிப்புக்கள்:















நரைமுடி கருப்பாக,

சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்


பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள்,

பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது


சாப்பாட்டு மேஜை,

சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது


செடிகள் செழித்து வளர,

மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்

பீரோ மணக்க,

ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால்,

தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்

ஏலக்காய்,

ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்

மிக்சியை கழுவ,

மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.


தேங்காயை சுலபமாக உடைக்க,

தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.


குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால்..,

குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.


குழந்தைகள் சுறுசுறுப்பாக வேண்டுமா?,

நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்

துளசி இலைகளை மென்று தின்றால்..,

தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

கூந்தல் பளபளக்க.,

சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.


தகவல் தமிழ் களஞ்சியம்




தேங்காய் சட்னியில் காரம் அதிகமாகிவிட்டதா? அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள். காரம் குறையும். சுவையும் அதிகரிக்கும்.

பக்கோடாவுக்கு மாவு பிசறும்போது கொஞ்சம் பிரெட் தூளையும் கலந்தால் பக்கோடா மொறு மொறுவென சூப்பராக இருக்கும்.

நெய் ரொம்ப நாளுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? அதில், கொஞ்சம் வெல்லத்துண்டைப் போட்டு வையுங்கள்.

காபித்தூள் வைக்கிற டப்பாவில் நான்கு அல்லது ஐந்து அரிசி போட்டு வைத்தால் அது கட்டியாகாது.

குக்கரின் உள்பாகம் கறை படிந்திருக்கிறதா? உள்ளே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் கழுவ, பளிச்சிடும் குக்கர்!

கறை படிந்த கண்ணாடி கதவுகளைத் துடைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம்... வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு சொட்டு நீலம் போட்டு, பிறகு துடையுங்கள். இப்போது பாருங்கள்... பளிங்காக பளீரிடுகிறதா கண்ணாடி?

No comments: