*முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
* அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
* வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
* கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை,முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.
* வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.
* வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது. நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
* சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
* நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
* வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்,நூல் தெரிந்தால் ஓ.கே!
* சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்றுநினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இன்னொரு பகுதி தண்ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.
*தேங்காய் ஆட்டி பார்த்து உள்ளே நல்லா தண்ணி இருக்குற காயா பார்த்து வாங்கணும்
*முட்டைகோஸ் இலை பிரியாம கொஞ்சம் பச்சை நிறமா இருக்குறதை வாங்கணும்.
*வெங்காயம் வாங்கும்போது, மேற்பாகமும், கீழ்பாகமும் அதிகம் வளராமலும், நீள்வாக்க்கில் இல்லாமல் உருளையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
*கத்திரிக்காய் வாங்கும்போது அழுத்தி பார்த்து கல் போலில்லாமலும், காம்புகள் நீளமாகவும், மேல்தோல் காயைவிட்டு பிரியாமலும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment