Sunday, 31 March 2013

யூடியூபில் வீடியோ விளம்பரங்களை தவிர்க்க புதிய வழி!

விருப்பமான வீடியோவினை பார்க்கும் போது, அந்த விளம்பரத்தினை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.
ஆனால் இதை தவிர்க்கவும் நிறைய வழிகள் உள்ளது. இந்த வீடியோக்களை எப்படி தவிர்ப்பது என்பதன் வழிகளை இங்கே பார்க்கலாம்.

கூகுள் க்ரோமில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்கிப் ஏட்ஸ் ஆன் யூடியூப் அல்லது யூடியூப் எக்ஸ்டென்ஷன் என்பது போன்ற வாசகத்தினை கொடுத்து கூகுள் க்ரோமில் முதலில் எக்டன்ஷன்கள் தேட வேண்டும். அதன் பிறகு எக்டன்ஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அந்த எக்ஸ்டன்ஷன் பக்கத்தில் ஏட் க்ரோம் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்தால் ப்ளூ கலரில் ஒரு பட்டன் சேர்வதை பார்க்க முடியும்.

இந்த பட்டனை உபயோகித்து யூடியூப் வீடியோவில் வரும் விளம்பரங்களை எளிதாக தவிர்க்க முடியும். க்ரோமில் மட்டும் அல்லாமல் ஃபையர்ஃபாக்ஸிலும் இந்த எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக இருக்கிறது.