Thursday 28 March 2013

குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?


குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
(EYE DISCHARGE DUE TO NASOLACRIMAL DUCT OBSTRUCTION)

[You must be registered and logged in to see this image.]



பிறந்த குழந்தை , ஒரு வயதிற்கு குறைவான 
குழந்தைகளுக்கு கண் பொங்குதல் என்பது அடிக்கடி வரும் ஒரு நிலை . 
சூட்டினால் இது வருகிறது என்று தேவை இல்லாத சில வைத்திய முறைகளை 
பெற்றோர் செய்வார்கள் ( தாய்ப்பால் கண்ணில் விடுவது , எண்ணெய் தேய்த்து 
குளிபாட்டுவது) 



[You must be registered and logged in to see this image.]
ஆனால் இதற்க்கான காரணம் NLD (NASOLACRIMAL DUCT OBSTRUCTION ) எனப்படும் அடைப்பு ஆகும் .


சாதரணமாக நம் எல்லோருக்கும் 
கண்ணுக்கும் மூகிற்க்கும் ஒரு இணைப்பு உள்ளது . கண்ணீர் இதன் வழியே 
மூக்கின் உள்ளே வடிந்துவிடும் . பிறந்த குழந்தைக்கு இந்த இணைப்பு 
சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தாலோ , அடைப்பு ஏற்பட்டு இருந்தாலோ 
கண்ணில் நீர் வடிவத்துடன் இமைகள் பிரிக்கமுடியாமல் மூடவும் வாய்ப்பு 
உண்டு .


மருத்துவம் : NLD MASSAGING :

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

மசாஜ் செய்வதன் மூலம் இதனை சரி செய்யலாம் . ஒரு நாளைக்கு ஆறு முதல் 
எட்டு தடவை C வடிவத்தில் கண்ணிற்கும் மூக்குக்கும் இடையே மசாஜ் 
செய்யவேண்டும் .


மருத்துவர் ஆலோசனை படி கண் சொட்டு மருந்து போட்டு வரவேண்டும் .
தாய்ப்பால் போடுதல் , எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுதல் கூடாது .
.....டாக்டர் ராஜ்மோகன்....