Friday, 15 March 2013

வெங்காயம் பற்றி.


உலகத்தில் இன்று உபயோகத்திலிருக்கும் காய்கறிகளிலேயே மிகவும் பழமையானது வெங்காயம்.வெங்காய உற்பத்தியில் இந்தியா,மலேசியா,பர்மா,சைனா,எகிப்து மற்றும் பல ஆப்ரிக்க நாடுகளும் முன்னணியில் உள்ளன.வெங்காயத்தில் பல வகைகள் உள்ளன.இந்தியாவில் சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்),பெரிய வெங்காயம்(பெல்லாரி வெங்காயம்) என இரண்டு வகைகள் மிகவும் பிரபலமானவை

100 கிராம் வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்:

நீர்ச்சத்து-86.6 கிராம்,
புரதம்-12 கிராம்,
கொழுப்பு-0.1கிராம்,
மாவுச்சத்து-11.1 கிராம்,
நார்ச்சத்து-0.6 கிராம்,
தாதுக்கள்-0.4கிராம்,
கால்சியம்-47மில்லி கிராம்,
பாஸ்பரஸ்-50 மி.கிராம்,
வைட்டமின் சி-11 மி.கிராம்,
இரும்புச்சத்து-0.7  மி.கிராம்,
பி.காம்ப்ளக்ஸ்-சிறிய அளவு.

பாதுகாத்தல்:

நன்கு காய்ந்த வெங்காயம் 3 முதல் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.குளிர்பதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.வினிகரில் ஊறவைத்த வெங்காயம் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

மருத்துவ குணங்கள்:

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உள்ளது என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.வெங்காயம் தொடர்ந்து உண்ணும் போது ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு குறைவதோடு ரத்தத்தின் உறைதன்மையும்,ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.தினமும் 100 கிராம் வெங்காயம் தொடர்ந்து உண்டுவந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.நுரையீரல் நோய்கள்,சிறுநீரக நோய்கள்,மூலநோய்,புற்றுநோய் எதிர்ப்பு,மன அமைதி ஆகியவற்றிற்கு வெங்காயம் மிகவும் சிறந்தது.