கத்தி துருப்பிடித்துள்ளதா? அந்தப் பகுதியை ஒரு சிறிய வெங்காயத் துண்டில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து நன்றாகத் துடையுங்கள். துரு ஓடிப்போய்விடும்.
என்ன செய்தும் ஃபிளாஸ்க்கில் வருகிற துர்நாற்றத்தைப் போக்க முடியவில்லையே என்கிறவர்கள், வெந்நீருடன் தயிரைக் கலந்து கழுவுங்கள். வாடை நீங்கி, வசீகரிக்கும் ஃபிளாஸ்க்.
டாய்லெட்டில் கொசு மண்டுகிறதா? கொஞ்சம் மண்ணெண்ணையைத் தெளித்துவிடுங்கள். ஒரு கொசுவும் உள்ளே நுழையாது.
*முட்டையின் வெள்ளைக் கருவை அடித்து வைத்து, அத்துடன் கொஞ்சம் உப்பையும், சில துளிகள் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து வைத்துவிட்டால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
* காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.
* துணிகளை தேய்க்கும்போது சில துளிகள் யுடிகோலனை விட்டுத் தேய்த்தால், சென்ட் போட வேண்டிய அவசியமில்லா மல், நல்ல மணமுடனிருக்கும்.
No comments:
Post a Comment