Saturday, 31 October 2015

vegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்!!!


மிகவும் சுவையான வெஜிடபள் மஞ்சுரியன் ஒரு indo-  chinese   ரெசிபி . இதை செய்ய தண்ணீரே தேவையில்லை  என்பது இன்னொரு தகவல் 

தேவையான பொருட்கள் :

மைதா -1/3 கப் 
கார்ன் ப்ளோர் - 2 ஸ்பூன்
கேரட் - 3/4 கப் (துருவியது)
முட்டைகோஸ் -  - 3/4 கப் (துருவியது)
குடைமிளகாய் - 1/4 கப் (மிக பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
மல்லிதழை (அ ) வெங்காயதாள் - அலங்கரிக்க
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :


  • முதலில் துருவிய காய்களை ஒன்றாக கலந்து ,அதனுடன் மைதா ,கார்ன் ப்ளோர் ,உப்பு , பாதி இஞ்சி பூண்டு விழுது ,மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து , அதை உருண்டைகளாக பிடிக்கவும் .உருண்டைகள் பிடிக்கும் போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை .காய்களின் ஈரப்பதமே போதுமானது .
  • வாணலில் எண்ணெய் காய விட்டு ,அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும் .
  • பின் வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு , வெங்காயம் , பச்சை மிளகாய் ,  மீதி இஞ்சி பூண்டு விழுது  ,சிறிது உப்பு (விரும்பினால் வதக்கும் போது சிறிது ,நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கலாம் )சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன்  சோயா சாஸ் ,மிளகாய் சாஸ் , தக்காளி சாஸ் ,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ,அதனுடன் உருண்டைகளை சேர்த்து ,விரும்பினால் சிவப்பு கலர் பொடி சேர்த்து நன்கு பிரட்டி மல்லிதழை தூவி இறக்கவும் .
  • சுவையான வெஜிடபள் மன்சுரியன் தயார் .