Sunday, 4 October 2015

ஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா!!!


animation_propellor

இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி.
மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ,அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை அல்லவாஅதற்கு பயிற்சியும் அனுபவமும் தேவை தானே!.
பெரும்பாலும் டிஜிட்டல் காமிராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவறுக்கான ஒளி அளவு போன்ற விஷயங்களுக்கான தேர்வுகள் இல்லாமல் தானியங்கி அமைப்பில் எடுக்கப்படுபவை.அதாவது சுற்றுப்புறம் மற்றும் ஒளி அமைப்பிற்கு ஏற்ப காமிராவே எல்லாவற்றையும் அமைத்து கொள்கிறது. எனினும் இந்த ஆட்டோபோக்கஸ் வசதியை தாண்டி சூழ்நிலைக்கேற்ப அழகான புகைப்படங்களை எடுக்க விரும்பினால் , புகைப்பட கலையின் அடிப்படையை கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதிலும் நவீன் டி.எஸ்.எல்.ஆர் காமிராக்களில் உள்ள வசதி மற்றும் லென்சுகளின் துல்லியத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு அருமையான புகைப்படங்களை எடுக்க இவை மிகவும் அவசியம்.
ஆம்புகைப்படக்கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் நன்றாக தான் இருக்கும் என்று நினைத்தால் அதற்காக நீங்கள் எங்கேயும் கூட செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே இணையத்திலேயே புகைப்படக்கலையின் அடிப்படையை கற்றுக்கொள்ளலாம்.
இணையத்தில் கற்கலாம்
இணையத்தில் புகைப்படம் எடுக்க கற்கலாம் என்றவுடன் இணையதளம் மூலமான வகுப்புக்களையோ அல்லது யூடியூப் மூலமான வீடியோ பாடங்களையோ நினைத்துக்கொள்ள வேண்டாம். இது இணைய காமிரா மூலமே புகைப்பட எடுக்க கற்றுக்கொள்ளும் புதுமையான வழி ! ஆனால்,காமிரா இல்லாமல் புகைப்படக்கலையை கற்பது எப்படிஅதனால் தான்  வர்ச்சுவல் காமிரா என்று சொல்லப்படும் இணைய காமிரா உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இணைய காமிரா மூலமாகவே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற காமிரா தயாரிப்பு நிறுவனமான கேனான் இந்த இணைய காமிராவை உருவாக்கியுள்ளது. கேனான் நிறுவனத்தின் கண்டா நாட்டு பிரிவு சார்பாக இந்த இணைய காமிராவுக்கான இணையதளமும் , அதன் மூலமான புகைப்பட அடிப்படை பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.