ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா? என்று கேட்டு இருந்தார். கண்டிப்பா பல வழிகளில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அனைத்து ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியும். இங்கே நான்கு வழிகளில் எப்படி மொபைல் ஆப்ஸ் கணினியில் பயன்படுத்தலாம் என்பதை புதியவர்களுக்கு இந்த பதிவில் எழுதுகிறேன்.
1. BlueStacks
BlueStacks ஒரு பிரபலமான எமுலேட்டர். இதை உலகம் முழுவதும் 90 மில்லியன் பேர் BlueStacks பயன்படுத்துகிறார்கள்.
கீழே
உள்ள
டவுன்லோட்
லிங்க்
மூலம்
எளிதாக
டவுன்லோட்
செய்து
இன்ஸ்டால்
செய்யலாம்.
கணினியில்
டெஸ்க்டாப்ல
ஒரு
விண்டோ
போல
அனைத்தும்
அப்ளிகேஷன்களும்
வேலை
செய்யும்.
புளுஸ்டாக்ஸ்
இன்ஸ்டால்
ஆகும்
போதுஅத்தியாவசிய
ஆப்களை
இன்ஸ்டால்
செய்வதால்
சற்று
நேரம்
பிடிக்கும்.
இது
விண்டோஸ்
ஆபரேட்டிங்
சிஸ்டம்ல
தனி
மென்பொருளாக
இயங்கும்
தன்மை
உடையது.
[Download
2. Official Android Emulator
கூகிள் நிறுவனத்தின் Android SDK வெளியீடுதான் Official Android Emulator என்ற மென்பொருள். இதுவும் மிக சிறப்பான எமுலேட்டர்தான். இதன் கொள்ளளவு சற்று அதிகம். ஆம் 962MB இதில் அனைத்து வகை ஆப்களும் அடங்கும். இது தனி ஆபரேட்டிங் சிஸ்டமாக இயங்கும். ஆண்ட்ராய்ட் ஒஸ் என்று சொல்லலாம். உங்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். ஆண்ட்ராய்ட் கணினியில் தங்குதடாயின்றி கேம்ஸ் விளையாடலாம். [Download]
3. ARC Welder for Chrome
இது
கூகிள்
குரோம்
பிரவுசர்ல
இயங்கும்
ஒரு
சிறிய
நீட்சிதான்
(Extension). இந்த
நீட்சியை
உங்கள்
கூகிள் குரோம் பிரவுசர்ல இன்ஸ்டால் செய்து விட்டால் எமுலேட்டர் ரெடி. chrome://apps/ சென்று படத்தில் தெரியும் ARC Welder ஆப் ஓபன் செய்து உங்களுக்கு பிடித்த அப்ளிகேசனின் APK பைலை டவுன்லோட் செய்து இதில் தேர்ந்தெடுத்த பிறகு மொபைல் அல்லது டெப்லெட் போன்ற விவரங்களை கொடுத்து சேமித்தால் குரோம் ஆப்ஸ் பக்கத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆப் வந்து விடும். அவ்வளவுதான் அந்த ஆப் கிளிக் செய்து அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இயக்கிக்கொள்ள முடியும். இதில் உங்களுக்கு தேவையான ஆப் மட்டும் இன்ஸ்டால் செய்யும் வசதி இருப்பது சிறப்பு. [Download ARC Welder Chrome extension]
4. Android-x86 on VirtualBox
Virtual Box மூலம் Android App மொபைலில் இயங்க்க்குவது போன்றே இயக்கலாம். இதில் இரண்டு வேலைகள் செய்ய வேண்டும். முதலில் VirtualBox டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். VirtualBox மென்பொருளை Windows, லைனக்ஸ், மேக் ஒஸ் என எதில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அடுத்து android-x86.org தளத்தில் சென்று அண்மையில் ரிலீஸ் ஆன ஆண்ட்ராய்ட் ஒஸ் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இப்போது VirtualBox ஓபன் செய்து அதில் டவுன்லோட் செய்து வைத்துள்ள ஆண்ட்ராய்ட் ஒஸ் பைலை லோட் செய்யுங்கள். முடிவில் VirtualBox உள்ளே ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் கணினியில் தோன்றுவது போல மிக நேர்த்தியாக இருக்கும். இனி நீங்கள் விரும்பிய ஆப் பயன்படுத்த தொடங்குங்கள். [படம் பாருங்கள்]
கணினி/லேப்டாப்/கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.
கணினி/லேப்டாப்/கேம்ஸ் பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். உங்கள் கருத்தை இந்த தளத்தின் கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்ஸ் பாக்ஸ்ல தெரிவியுங்கள். நீங்கள் பயனடைந்தால் நான் மகிழ்வேன்.