அண்ட்ரோய்ட் இயங்கு தளத்தை பயன்படுத்தும் பலர் பெரும்பாலும் ஒரு Apps வெறியர்களாகவே இருப்பார்கள். தினமும் ஐந்தாறு புதிய மென்பொருட்களை தரவிறக்கி பரீட்சித்துப் பார்க்காவிட்டால் அவர்களுக்குத் தூக்கமே வரமாட்டாது. அப்படிப் பட்டவர்களுக்கு Google Play Storeஎன்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றது. புதிதாய் ஒரு App வந்ததுள்ளது. சரி நாமும் அதை முயற்சித்துப் பார்ப்போமே என்று Play Store க்கு விழுந்தடித்து ஓடிச்சென்று அதை தேடினால், அதைக் காணக்கிடையாது. அட என்னடா இது என்று கூகிளில் Searchஐப் போட்டால் ஒன்றில் அது எமது நாட்டில் வெளியிடப்பட்டிருக்காது.(This app is not available in your country) அல்லது அந்த App நமது போன் மொடலுக்கு சப்போர்ட் செய்யாது (this app is not compatible with your device) எனத் தெரியவரும். Soஇனி நாம் அந்த Appஐ எமது போனில் தரவிறக்கம் செய்து Run பண்ண கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கவேண்டி வரும். அதுமட்டுமல்லாமல் 50 ருபாய்Recharge கார்ட்டுக்கே சிங்கியடிக்கிற எங்களை எல்லாம் 4.99$ கொடுத்து ஒரு App ஐ வாங்கச் சொன்னால் எப்படியிருக்கும்.
அதற்காகத்தான் சில தளங்கள் எங்களைப் போன்ற பாமர (?)அண்ட்ரோய்ட் பிரியர்களுக்கு சேவை செய்வதற்காகவே இயங்குகின்றன. அவற்றில் சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .அதில் என்னைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடிப்பதுApkmania.com
1. Apkmania.com
இவற்றில் என்னைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடிப்பது Apkmania.com தான். ஏனெனில் Apkmania.com இன் Crack வேர்சன்களைத்தான் ஏனைய பெரும்பாலான தளங்கள் பயன்படுத்துகின்றன. கட்டண மென்பொருட்கள் Crack செய்யப்பட்டு இலவசமாக தரவிறக்கம் செய்யக் கூடியாதாக உள்ளன. அத்தோடு சில in-app purchaseசெய்யக்கூடிய Apps மற்றும் Games Mod செய்யப்பட்டு unlimited money, unlimited gemsபோன்ற வரப்பிரசாதங்களுடன் கிடைக்கின்றன . (இதுவும் திருட்டு VCD யில் படம் பார்ப்பது போலத்தான்.)
2. Apkmirror.com
இது ஒரு உத்தியோகபூர்வ தளமாகும். இதில் எந்த திருட்டு வேலைகளும் கிடையாது.Androidpolice.com இந்த தளத்தைத்தான் பயன்படுத்துகின்றது. இங்கு பிரபலமானDevelopers களுடைய (உரதாரணம் Google, Facebook, Microsoft, Amazon) செயளிகளின் இறுதி வெர்சன் மற்றும் beta version கள் கிடைக்கும். சில செயலிகள் வெளியாகியும் இன்னும் உங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் அது நிச்சயம் இங்கு கிடைக்கும் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இங்கு தரவிறக்கும் செயலிகளுக்கு Google Play StoreSupport கிடைக்கும். எனவே எதிர்காலத்தில் நீங்கள் அவற்றின் அப்டேட்களை Google Play Store இலேயே பெறமுடியும். அத்தோடு in-app purchase களையும் மேற்கொள்ளமுடியும். Google Play Game ஐயும் Connect செய்யலாம்.
3. 1mobile.com
இதுவும் Google Play Store போன்ற ஒரு தளமாகும். 1mobile App ஐ போனில் இன்ஸ்டால் செய்வதன்மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யலாம். Google Play Storeக்கு அடுத்ததாக Android ற்கான மிகப்பெரிய Market இதுதான். இங்கு பல செயலிகள்Fake ஆகவும் உள்ளன.
4. apkmaniafull.com
இந்த தளமானது செயற்பாட்டிலும், வசதிகளிலும், ஏன் வடிவமைப்பிலும் Apkmania.comஐ ஒத்தது. இங்கும் பல கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
5. apkmodded.com
இது Mod செய்யப்பட்ட Apps & Games க்காகவே இயங்கும் ஒரு தளமாகும். இங்கு பிரபலமான எல்லா Apps & Games உம் Mod செய்த நிலையில் download செய்யலாம். Game பிரியர்களுக்கு இந்த தளம் ஏற்றது.
6. onhax.net
இங்கு Crack செய்யப்பட்ட Android Appsமட்டுமல்லாது Windows மென்பொருட்களும் உள்ளன.
இவற்றை விட மேலும் எத்தனையோ தளங்களில் Android Apps ஐ டவுன்லோட் செய்யலாம். என்னும் மேலே உள்ள ஆறு தளங்களும் Malware குறைந்த தளங்களாக பொதுவாகக் கருதப்படுகின்றது. எனினும் Google Play Store தவிர்ந்த ஏனைய தளங்களில் தரவிறக்கும் எந்தவொரு செயலியாலும் உங்கள் Privacy க்கு உத்தரவாதம் தரமுடியாது. அதைப்பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம். (இந்த கட்டுரை திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகளில் புகைத்தல் உடல்நலத்திற்கு கேடானது, மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடானது என்று போடுவதைப் போலுள்ளது)