Friday, 30 October 2015

பிஸிபேளாபாத் மசாலா பொடி!!!






சாதரணமாக இந்த பொடியில் கொப்பரைத்துறுவல் சேர்த்து அரைப்பாங்க,ஆனால் இந்த செய்முறையில் சேர்க்க தேவையில்லை.சாதம் செய்யும் போது சேர்த்தால் போதுமானது.

அதனால் தேங்காய் சேர்க்காததால் இந்த பொடியை 3 மாதம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இதே பொடியை உருளை மற்றும் கத்திரிக்காய் வறுவல் செய்தால் மிக அருமை.

மேலும் இதில் காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது ந‌ல்ல நிறைத்தை கொடுக்கும்.

வறுக்கும் போதும் கொடுத்துள்ள முறைப்படியே பொருட்களை சேர்த்து வதக்கவும்.

தே.பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியா- 1/4 கப்+1/8 கப்
காய்ந்த மிளகாய் -10
காஷ்மிரி மிளகாய்- 22
1 இஞ்ச் அளவு பட்டை- 6
கடுகு- 1/2 டீஸ்பூன்
கசகசா- 1/2 டேபிள்ஸ்பூன்
கிராம்பு -3
வெந்தயம்- 1/8 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+கடுகு+கிராம்பு+வெந்தயம்+பட்டை+கா.மிளகாய்+காஷ்மிரி மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.

*கடைசியாக தனியா+கசகசா சேர்த்து வதக்கவும்.

*நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அரைத்த பொடியை சிறிது நேரம் ஆறவைத்து காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.