Monday, 7 July 2014

'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவார அப்ப இதை படிங்க!!!

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.


வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

ஏசி அறையில் இருப்பவர்கள் உஷார்!

டிஹைட்ரேஷன் எனும் உடம்பில் நீர்ச்சத்து குறையும் தன்மை போதுமான அளவு நீர் குடிக்காத அனைவருக்கும்
வரும். குறிப்பாக, 'ஏசி' அறையில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். 'ஏசி' குளிர்ச்சியாக இருப்பதால் அந்தச் சூழலில் தண்ணீர் குடிக்கத் தோன்றாது. உடம்பின் நீர்த் தேவையும்
நம்மால் உணர முடியாது.கோடையில் அடுத்த பிரச்னை நோய்த் தொற்று. சத்தான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரித்து நோய்த் தொற்றை விரட்டலாம். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களான தர்ப்பூசணி, வெள்ளரி, கிர்னி போன்றவற்றை முடிந்த அளவு தினமும் சாப்பிட
வேண்டும். உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விட்டால், எதிலும் கவனம் இருக்காது.சாதாரண நாட்களிலேயே ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் நீர் ஒருவருக்கு தேவை. வெயில்
காலத்தில் இதை விட கூடுதலாக ஒரு லிட்டர் குடிக்க வேண்டும். தண்ணீர் போன்று சிறந்த திரவ ஆகாரம் வேறு எதுவும் இல்லை.அதிகமாக வியர்வைவெளியேறும்
போது, உடம்பில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட் ரோலைட்ஸ்அளவு கணிசமாகக் குறைந்து விடும். இதில் பொட் டாசியம் குறைந்தால் இதயத் துடிப்பில்
மாற்றம் ஏற்படும். வயதானவர்கள் கோடைக் காலத்தில் இறப்பதற்கு இதுவே காரணம். மோர், இளநீர் போன்றவற்றில் எலக்ரோலைட்ஸ் அதிகம். வெயில் காலத்தில்
உப்பு சாப்பிடக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அது தவறு. மாங்காயைத்தவிர்த்து, மாம்பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.