Sunday, 20 July 2014

விமானம் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள!!!



தற்போது விமானங்களில் பயணம் செய்பவர்கள் தமது உயிரைக் கையில் பிடித்தவாறே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதற்கு கடந்த பெப்ரவரி மாதம் கடத்தப்பட்ட எதியோப்பிய விமானம், மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம், சில தினங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் என்பன சான்று பகிர்கின்றன.
இவை தொடர்பான விபரங்களை http://www.flightradar24.com/data/pinned/ என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம்.
இதேவேளை, போக்குவரத்து விமானங்கள் பறப்பில் ஈடுபடும்போது அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் கட்டுப்பாட்டு மையம் தெரிந்துகொள்ளும்.
இத்தரவுகளை பயணிகளும், அல்லது பயணிகளின் உறவினர்களும் அறிந்துகொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இச்சேவையினை http://www.flightradar24.com/ எனும் இணையத்தளம் வழங்கி வருகின்றது.
இதில் உலகெங்கிலும் பறப்பில் ஈடுபடும் விமானங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன, விமான இலக்கங்கள், பறப்பில் ஈடுபடும் உயரம், வேகம், அகலாங்கு, நெட்டாங்கு என்பனவற்றுடன் குறித்த நேரத்தில் எவ்விடத்தில் பயணிக்கின்றது தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர சரியான நேரத்திற்கு புறப்படும் விமானங்கள், தாமதமாகி புறப்படும் விமானங்கள் என்பவற்றினையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும்.
இச்சேவையைினை iOS, Android மொபைல் சாதனங்களிலும் பெற்றுக்கொள்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றினை http://www.flightradar24.com/ முகவரிக்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.