பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது. அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம். இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.
ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம். அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது என்றும் வெளிப்படுத்தும். என்ன புரியவில்லையா? பொதுவாக குழந்தை வளர வளர, அவர்களின் குடலியக்கமும் மாறுபடும். அப்போது குடலியக்கத்தின் மாறுபாட்டினால் ஒருசில வித்தியாசமான சில மாற்றங்களும் ஏற்படும்.
அப்படி ஏற்படும் மாற்றத்தில் ஒன்று தான் மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு. இங்கு குழந்தை மலம் கழிப்பது பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை புதிதாக பெற்றோர் ஆனவர்கள் படித்தால், அவர்களின் மனதில் உள்ள கேள்விக்கான விடை கிடைக்கும். சரி, இப்போது அவற்றைப் பார்ப்போமா!!!
பிறந்த குழந்தை
குழந்தை பிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.
பச்சை நிறத்தில் மலம் குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.
மஞ்சள் நிறத்தில் மலம் குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.
உணவுக்கு பின் மலம் கழிக்கக்கூடும் குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்.
மலத்தின் அமைப்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும்.
சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பது பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.
குழந்தையின் வயிற்றுப்போக்கு
ஒருவேளை குழந்தை நீர்ம நிலையிலோ, பிசுபிசுப்பாகவோ மலத்தை கழித்தால், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். அப்போது மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தை 2 நாட்களுக்கு தொடர்ந்து, அதிலும் பிறந்து 4 மாதம் ஆனப் பின்னர் மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மலச்சிக்கல் என்று அர்த்தம்.
மலத்தில் கபம்
குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளிவந்தால், குழந்தைக்கு கபம் உள்ளது என்று அர்த்தம். மேலும் குழந்தைகளால் அதனை தும்மி வெளியேற்ற முடியாது, மாறாக மலத்தின் மூலம் வெளியேற்றுவார்கள்.
வாயுவுடன் மலம்
உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது, அதிகம் வாயுவை வெளியேற்றினால், தாய்ப்பால் கொடுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். ஏனெனில் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்றினை அதிகம் விழுங்கிவிடுகின்றனர். எனவே அப்போது தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தாய்மார்கள் மாற்ற வேண்டும்.
கருப்பு நிறத்தில் மலம்
குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் போது, குழந்தையின் மலமானது கருப்பு நிறத்தில் வெளிவரும். மேலும் இந்த கருப்பு நிற மலமானது ஒன்று உணவின் காரணமாகவும் வெளிவரலாம் அல்லது மலச்சிக்கல் என்றாலும் வெளிவரும். எனவே அப்படி குழந்தைகளுக்கு அதிகமாக கருப்பு நிறத்தில் மலம் வெளிவந்தால், உடனே பரிசோனை செய்வது நல்லது.
குழந்தையின் மலத்தின் நாற்றம்
பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்களது மலத்தின் வாசனையானது சற்று இனிமையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது துர்நாற்றம் வீசும்.