Monday 14 April 2014

கம்ப்யூட்டர் வேகத்திரனை குறைத்துவிடாமல் செய்யும் மென் பொருள்!!!

PART I:



கணினியை தினமும் பயன்படுத்தினால் அதன் செயல்பாடு திறன் நாள் அடைவில் குறைந்து விடுகிறது, என்பது ஒரு பரவலான குற்றச்சாட்டு. அதற்கு முக்கியமான காரணம் operating system-தினால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகள் மற்றும் registry என்கிற மென்பொருள் பதிவேடும் தான். Operating System திறன்பட இயங்க இந்த தற்காலிக கோப்புகள் மிக முக்கியமானவை. ஆனால் அதன் வேலை முடிந்த உடன் தற்காலிக கோப்புகள் தேவையற்ற ஒன்று தான். தொடர் உபயோகத்தினால் தற்காலிக கோப்புகள் மலை போல சேர்ந்து கொண்டே வரும். அதனால் hard disk-யில் இடம் குறைத்து கொண்டே வருவதனால் operating system மெதுவாக இயங்கும். Windows Operating System தானாக எல்லா தற்காலிக கோப்புகளையும் அழிக்காது.

 

இவ்வாறு சேர்த்துக்கொண்டே வரும் கோப்புகளை நாம் தான் அடிக்கடி அழிக்கவேண்டும். மேலும் மென்பொருள் பதிவேடையும் பராமரிக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு பராமரிப்பு பணிகளையும் எளிமையாக்க CCleaner என்கிற மென்பொருளை பயன்படுத்தலாம். CCleaner ஒரு இலவச மென்பொருள். இதனை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

1. CCleaner-ரை டவுன்லோட் செய்து நிறுவியபின் எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். CCleaner-ரை ஓபன் செய்தால் இவ்வாறு ஒரு விண்டோ கிடைக்கும்:

2. இந்த விண்டோவின் இடதுபுறம் உள்ள cleaner-என்பதை தேர்வு செய்து வலதுபுறம் உள்ள Analyze-என்கிற பட்டனை கிளிக் செய்தால் என்ன-என்ன கோப்புகள் அழிகவேண்டியவை மற்றும் disk-ல் அதன் ஆக்கிரமிப்பு அளவினை குறிப்பிடும். மொத்தம் எவ்வளவு இடம் காலியாகும் என்கிற செய்தி கூட வரும். பிறகு run cleaner-என்கிற பட்டனை கிளிக் செய்தால் அனைத்து தேவையில்லா கோப்புகளையும் தானாகவே அழித்துவிடும். அழித்தபின் எவ்வளவு இடம் காலி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும்.

3. அடுத்து வலது பக்கம் உள்ள registry-என்கிற பட்டனை கிளிக் செய்யவும். இந்த விண்டோவில் இடது பக்கம scan for issues-பட்டனை கிளிக் செய்தால் கணினியில் உள்ள அனைத்து மென்பொருள் பதிவேடுகளையும் ஆராயும். அதில் ஏதேனும் தவறு இருந்தால் காட்டி விடும். பின்பு fix selected issues...-என்கிற பட்டனை கிளிக் செய்து பதிவேட்டை சரி செய்யல்லாம். சரி செய்வதற்கு முன் அப்போதைய பதிவேட்டை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக save-செய்ய சொல்லும். நீங்கள் அதனை save-செய்து விட்டு பதிவேட்டை சரி செய்யல்லாம். பின்னர் பராமரிப்பு முடித்தபின்பு என்ன பனி செய்யப்பட்டது என்கிற செய்தி வரும்.
4. அடுத்தது வலது பக்கம் உள்ள tools-யை கிளிக் செய்யவும். பின்பு start up..-என்கிற தேர்வை கிளிக் செய்தால் கணினி தொடங்கும்போது தேவை படும் மென்பொருள்களின் பட்டியல் காண்பிக்கப்படும். அதில் இருந்து நமக்கு தேவை படாத மென்பொருள்களை நீக்கி விட்டால் கணினி மிக வேகமாக தொடங்கும். ஏனென்றால் கணினி தொடங்க தேவை படும் மென்பொருள்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். தெயவைல்லாத மென்பொருள்கள் இந்த தொடக்க பட்டியியலில் தானாகவே இணைத்து கணினியின் தொடக்க வேகத்தை குறைத்து விடுகின்றன.

மேற்கண்ட அனைத்து பராமரிப்பு பணிகளை வாரம் ஒரு முறை கடைபிடித்தால் operating system-மிக சீராக இயங்கும்.      



Part II:            



தற்காலிக கோப்புகள் மற்றும் மென்பொருள் பதிவேடு பற்றிய பராமரிப்பை பார்த்தோம். கணினியில் தகவல்களை அதிகம் பயன்படுத்தும் போது  மற்றும் ஒரு முக்கியமான பராமரிப்பு பணி hard disk-யில் செய்ய வேண்டியது இருக்கும்.

Windows Operating System-தின் மூலம் தகவல்களை சேகரித்தால் அது hard disk-இன் வெவ்வேறு பகுதியில் பதிவாகின்றன. பின்னர் தேவை படும் போது அந்த தகவல்களை திரும்ப பெற Operating System (OS) hard disk-இன் அத்தனை பகுதிக்கும் சென்று தகவலின் துகள்களை சேகரித்துக்கொண்டு வரும். இப்படி ஒவ்வொரு தகவலுக்கும் நடக்கும். இவ்வாறு தகவல்களை hard disk-இன் வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்தால் கணிசமான நேரமும் பிடிக்கும். இக்காரணத்தினால் கணினியின் வேகம் குறைய வாயுப்புகள் அதிகம். 


இதன் தீர்வாக defragmentation-என்கிற ஒருங்கிணைப்பு பராமரிப்பு பணி மாதம் ஒரு முறை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பு பணியின் போது தகவல்கள் hard disk-யில் ஒரே பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்யப் படுகின்றன. இதனால் OS-யினால் தகவல்களை மிக எளிதாக எடுத்துக்கொண்டுவர முடியும். பின்பு கணினியும் அதி வேகமாக செயல்பாடும்.

Auslogic Disk Defragment-என்கிற ஒரு இலவச மென்பொருள் இந்த பராமரிப்பு பணியை திறன்பட செய்யக்கூடியது. இது மற்ற மென்பொருள்களை விட அதிவேகமாக செயல் பட கூடிய ஒன்று. அதனால் தங்கள் பராமரிப்பி பனி மிக சுலபமாகவும் மற்றும் வேகமாகவும் முடிந்துவிடும், Auslogic Disk Defragment-யை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

1. இந்த மென்பொருளை முதலில் நிறுவவும். பின்பு அதனை ஓபன் செய்தால் கீழ் வருமாறு விண்டோ வரும்:



2. Hard Disk-இன் எந்த பகுதியெல்லாம் பராமரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்பு Defarg-என்கிற பட்டனை கிளிக் செய்தால் போதும். அதன் பிறகு மென்பொருளே பராமரிப்பு பணியை முடித்து விடும், பராமரிப்பு பணியின் போது வானவில்லின் வண்ணம் போல ஸ்க்ரீனில் தோன்றும். மிக அருமையாக இருக்கும். மூழு நீல நிறம் வந்து விட்டால் hard disk ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம.



3. Turn off PC after defragementation-என்கிற தேர்வை பயன்படுத்தினால் இந்த பராமரிப்பு பணியை இரவு நேரத்தில் கூட செய்யலாம். Auslogic மேன்போருள் தானாகவே பராமரிப்பு பணியை முடித்துவிட்டு கணினியை shut down செய்து விடும்.

கணினி எந்த தடையுமின்றி இயங்க இந்த அடிப்படை பராமரிப்புகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். CCleaner மற்றும் Auslogic Defrag மென்பொருள்கள் இந்த பராமரிப்பை மிக எளிதாக செய்து விடுகின்றன. இந்த இரண்டு மென்பொருள்களுமே ஒவ்வொருமாதாமும் அதன் வலைப்பக்கத்தில் குறைநீக்கப்பட்ட புது version-களாக update செய்யப்படுகிறது. எனவே அந்தந்த வலைப்பக்கத்தில் சென்று அவ்வப்போது அதன் புது version-களை தரவிறக்கி உபயோகித்தால் சிறப்பான பயன்பாட்டினை பெறலாம்.