Monday 7 April 2014

டிபன் சாம்பார்!!!

எளிதில் செய்ய கூடிய காலை நேர டிபன் சாம்பார்இதில் நிறைய காய்கள் சேர்ப்பதால் உடலிற்கு மிகவும் நல்லது. இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்…..

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        வெங்காயம் – 1
·        உருளைகிழங்கு – 1
·        பீன்ஸ் – 10
·        காரட் – 1
·        கருவேப்பில்லை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        புளி – சிறிதளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜைகரண்டி
·        கடுகு,சீரகம் – 1/4 தே.கரண்டி

வேக வைத்து கொள்ள :
·        துவரம் பருப்பு – 1/4 கப்
·        பாசிப்பருப்பு – 1/4 கப்
·        தக்காளி – 1

வறுத்து அரைத்து கொள்ள:
·        காய்ந்த மிளகாய் – 5
·        தனியா – 1மேஜை கரண்டி
·        துவரம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·        வெந்தயம் – 1/2 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        அரைத்த பொடி – 2 – 3 மேஜை கரண்டி
·        பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
முதலில் துவரம் பருப்பு +பாசிப்பருப்பு + தக்காளி + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயாம் + உருளைகிழங்கு,பீன்ஸ் ,காரட் எல்லாவற்றினையும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

இத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கள் + கருவேப்பில்லை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். அதனை காய்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதி நன்றாக வந்தவுடன் அரைத்த பொடி + தூள் வகைகள் சேர்க்கவும்.

இத்துடன் வேகவைத்துள்ள பருப்பினை நன்றாக மசித்து இதில் சேர்த்து வேகவிடவும்.

நன்றாக வெந்தவுடன் கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய டிபன் சாம்பார் ரெடி.

குறிப்பு :
பாசிப்பருப்பினை தவிர்த்து துவரம் பருப்பினை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

புளி பேஸ்ட் என்றால் 1/2 தே.கரண்டி பயன்படுத்தவும்.

கத்திரிக்காய், குடைமிளகாய் போன்ற காய்களை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல பொடியினை சேர்த்து கொள்ளவும்.