Sunday 2 December 2018

Kancheepuram Idly-காஞ்சிபுரம் இட்லி!!!

 

## வாங்க சமைக்கலாம்
மாமா, இட்லி செய்யறோமே அது என்ன காஞ்சிபுரமிட்லி ? ரிசிப்பி சொல்லுங்களேன்.
ராதிகா சிவராமன் நம்ம க்ரூப்ல இவர் இருக்கிறதோ இவருடைம போஸ்டிங் இது வரை நான் பார்த்தது இல்லை.
ஆனாலும் என் போன் நம்பரை எப்படியோ கண்டுபிடித்து இப்படி கேள்வி கேட்டா.
உண்மையான காஞ்சிபுரம் இட்லி பண்றது கொஞ்சம் கஷ்டம். அவர்கள் செய்யும் விதமே தனி.
எனக்கு தெறிந்ததை சொல்லி தரேன்.
இட்லி அரிசி ஒரு கப். பலகாரபச்சரிசி என்று தனியாக கிடைக்கும்.(வடை பருப்பு கிடைக்கிறதே அது போல)
இட்லி அரிசி ஒரு கப், பலகார பச்சரிசி ஒரு கப். அதே கப்பில் ஒரு கப் உளுத்தம் பருப்பு. இரண்டு ஸ்பூன் வெந்ததயம்
இரண்டு அரிசிளையும், வெந்தயத்தையும் சேர்த்து ஊறப்போடவும். உளுத்தம் பொறுப்பையும் ஊற விடுங்கள்.
குறைந்தது ஆறு மணி நேரம் ஊற விடவும்.
ஊறிய அரிசி , உளுந்து தனி தனியாக கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளுங்கள். கொஞ்சமா பேகிங் சோடா சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைத்தால் பர்மென்டேஷனால் மாவு இரண்டு மடங்காகும். உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் கொஞ்சம் எண்ணைக் கொஞ்சம் விட்டு
சூடாக்கிகொள்ளவும்.
இந்த எண்ணை/நெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
நல்ல மிளகை நசுக்கிப் போடவும்.
கிராம்பை கிள்ளிப் போடவும். மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி கொஞ்சம்
இஞ்சி துண்டு ஒன்றை சின்னசின்னதா கட் பண்ணிப் போடவும். கறிவேப்பிலை கிள்ளிப்போடவும். பச்சை மிளகாயை நறுக்கி விதையை நீக்கி போடவும்.
முந்திரி பருப்பு பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்புகளை உடைத்துப் போட்டு நன்றாக பொறிந்ததும் மாவில் கொட்டி கலக்கவும்.
இட்லி பாறையில் வெந்நீர் விட்டு கொதிக்க விடவும். இட்லி தட்டில் எண்ணை தடவி பாதியளவு மாவு விட்டு வேக விடவும். இருபது நிமிடத்தில் வெந்து விடும். ஒரு குச்சி/கத்தியால் குத்தி பார்த்தால் இட்லிமாவு ஒட்டாமல் வரணம். அப்பதான் வெந்திருககு என்று அர்த்தம். 
நாப்டாலில் ஆன் லைன் ஷாப்பிங்ல நல்ல இட்லி பான் வாங்கினேன் ரொம்ப நன்னாயிருக்கு.
சாதாரண இட்லிப் போல் இல்லாமல் ஒரு மாதிரி ஐந்து இல்லை ஆறு கப்புகளில் பாதியளவு மாவை விட்டு 
வார்த்தால் தான் பெயருக்கு ஏற்றப்படி 
காஞ்சிபுர இட்லியாக இருக்கும்.
மினி இட்லி தட்டு இருந்தால் அதிலும் வார்த்து விருந்தாளிகளுக்கு கொடுத்து அசத்தலாம்.

By Krishna Murthyiyer

No comments: