******
துவரம்பருப்பு. ..150கிராம்
கடலை பருப்பு..50
2மணிநேரம் ஊறவைக்கவும்..
பின் தண்ணீர் வடிகட்டிட்டு அரை டீஸ்பூன் சோம்பு உப்பு காய்ந்த மிளகாய் வத்தல் 3 சேர்த்து மிக்சில அரைச்சுக்கங்க... பொடி வெங்காயம்
மல்லிஇலை சேத்து பிசைந்து பின்.... சிறுசிறு உருண்டை களாக்கி ஆவியில் வேக வைக்கவும். ..
( ஒரு உருண்டை அளவு மாவு கரைத்து தனியா வைங்க)
...
இப்ப குழம்பு வைக்க
***
(புளி சிறிதளவு பஸ்ட்லயே ஊற வைங்க)
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு பொடி வெங்காயம் பூண்டு 5பல் சேர்த்து தாளிக்கவும்...
மஞ்சள் பொடி மல்லிபொடி வத்தல்பொடி சேத்து வதக்கவும்
1தக்காளி பழம் கட் பண்ணி அதோட சேர்த்து வதக்கினப்றமா புளியை கரைத்து ஊற்றவும்...
அதோட பஸ்ட்ல கரச்சு வெச்ச மாவையும் சேர்த்துக்கங்க
உப்பு தேவைக்கு சேருங்க நல்லா கிளறி விட்டுட்டு மூடி வைக்கவும்...
2டீஸ்பூன் தேங்காய் பூவை அரைத்து இதோடு கலந்து விடவும்...
பத்து நிமிடம் அப்றமா வேக வைத்த உருண்டைகளை சேருங்க...5 நிமிடம் கொதிக்கட்டும்...
அடுப்பை ஆஃப் பண்ணிட்டு
அப்றமா குழம்பை நல்லா மூடி வைங்க பத்து நிமிடத்திற்கு பின் சுடசுட பரிமாறுங்க ...
ஸோ டேஸ்ட்டி
Saturday, 14 October 2017
பருப்பு உருண்டை குழம்பு!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment