கோதுமை உசிலி
உபயோகப்படுத்த வேண்டிய பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
முழு உளுந்து - 1 கப்
கடலை பருப்பு - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3 (அ) 4
கருவேப்பிலை - 2 இலை
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். உளுந்து, கடலை பருப்பை ஊற வைக்கவும். இவற்றோடு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொண்டு, பிறகு இந்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறின பிறகு இதை மிக்ஸியில் அரைத்து வைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணை வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அதில் பெருங்காயம், கருவேப்பிலை, அரைத்து வைத்த பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் போது வதக்கி எடுத்து வைத்து பரிமாறவும்.