உடல் சூடு குறைய !!!
சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்கள்.
உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு.
உடற்காங்கை தான் பல நோய் களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.
உடற்காங்கை அதிகமாக காரணங்கள் - கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.
அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை விளைவிக்கும்.
உடல் சூடு குறைய சிகிச்சை முறைகள்
1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையில் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.
2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.
3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்கமாலா தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக் கலாம்.
4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.
5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.
6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.
7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.
8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.
10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் சிறந்தது.
12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.
அதிக உடல் உஷ்ணத்தினால் கணை நோய்கள் உண்டாகும்.
உஷ்ணத்தை குறைக்க ஆயுர்வேதத்தில் பல தைலங்கள் சொல்லப்படுகின்றன. வெண் தாமரை, செந்தாமரை, ரோஜாமொக்கு, அதிமதுரம், சீந்தில், நன்னாரி வேர், சிறுநெரிஞ்சில், சந்தனத்தூள், கோஷ்டம் இவைகளால் தயாரிக்கப்படும்
பத்மபத்காதிபானகம் மற்றும் கரிசிலாங் கண்ணி, பொன்னாங்கண்ணி, நெல்லிக்காய் சாறுகள், பசும்பால், நல்லெண்ணை, சந்தனம், கோஷ்டம், அதிமதுரம், மிளகு, வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் கடுகரோகினி இவற்றால் தயாரிக்கப்படும் மகாப் ருங்காமல்த்தைலம் தவிர சந்தனாதித் தைலம், சஞ்சீவித்தைலம், துளசி க்ருதம் போன்ற பல மருந்துகள் ஆயுர்வேதத்தில் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் பாலியல் குறைபாடுகள் தோன்றும்.
உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல் பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர் களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.
வெயில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு - விந்துப்பை (Scrotum) தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சீக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் 'கூலாக' (Cool - குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை (Sperma tozoa) விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியாகி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடைவதே கடினமாகி விடும்.
இது தவிர விந்துவின் 'பலமும்' குறையும். விந்துவின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள் - Testis) யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து விடுவதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை. இதை Varicocele என்பார்கள்.
உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். தவிர masturbation கைப்பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்(ஆயுர்வேதமருத்துவம் )