Sunday, 6 September 2015

திருநெல்வேலி வத்தக்குழம்பு!!!


Blog post image #1



இது புரட்டாசி மாதம் நிறையபேர் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள்.ஒருமாதம் முழுதும் பெருமாளுக்கு விரதம் இருந்து வாரம் தோறும் சனிக்கிழமைகளில் வடை பாயசத்துடன் சமைத்து பெருமாளுக்கு படையல் போடுவார்கள்.கார்த்திகைமாதம் கூட அப்படித்தான்,சிலர் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருப்பார்கள்.
எப்படி இருந்தாலும் தினமும் நான் வெஜ் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை நாங்கள் விரதம் வீட்டில் அசைவம் செய்யமாட்டோம் நீயும் வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது சாமிக் குததம் ஆயிடும்னு பயமுறுத்தி வைத்து இருப்பார்கள்.சிலர் சாமி என்ன செய்யுதுனு பார்த்துடுவோம்னு ஹோட்டலில் அசைவம் சாப்பிட்டுவிடுவார்கள்.ஆனால் பலர் வீட்டிற்கு சாமிக்கும் பயந்து அசைவம் சாப்பிட்டாமல் இருப்பார்கள்.அப்படி பட்டவர்களுக்கு தினமும் சைவம் என்ற பெயரில் சாம்பார்,காரக்குழபு என யூசுவலாக சமைக்காமல்,நாக்குக்கு ருசியாக சமைத்துப்போட்டால் கொஞ்சம் சத்தம் இல்லாமல் சாப்பிடுவார்கள்
அந்தவகையில் இந்தவாரம் திருநெல்வேலி வத்தக்குழம்பு செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்,
திருநெல்வேலி வத்தக்குழம்புக்கு தேவையானவை;
துவரம்பருப்பு-50 கிராம்
கடலைப்பருப்பு-50கிராம்
மணத்தக்காளி காய்ந்தது-50கிராம்
சுண்டக்காய் காய்ந்தது-50கிராம்
வெந்தயம்-சிறிதளவு
புளி-100கிராம்
மிளகாய்,தனியா சேர்த்து அரைத்தது-3கரண்டி
மாங்காய் வத்தல் -4 துண்டுகள்
நல்லெண்ணெய்-2 கரண்டி அளவு
தக்காளி-2
சின்னவெங்காயம்-சிறிதளவு
கருவேப்பிலை-தாளிக்க,
கொத்துமல்லி-சிறிதளவு
செய்முறை;
முதலில் நல்லெண்ணெயில் துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,சுண்டக்காய்,மணத்தக்காளி இவற்றை நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் மீதமிருக்கும் எண்ணெயில்,வெந்தயம் போட்டு தாளித்து அதில் கருவேப்பிலை,தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.வதங்கியபின் அதில் மிளகாய் தூள் தனியாத்தூள் சேர்ந்த பொடியை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.கலர் கொஞ்சம் பிரவுன்கலரில் வரும் போது அதில் புளியை நன்றாக தண்ணீரில் கரைத்து அந்த கலவையை உற்றி,அதனுடன் நாம் பொறித்து வைத்து இருந்தவற்றையும், உப்பும் போட்டு மூடி வைக்கவேண்டும்,நன்றாக குழம்பு திக்கானவுடன் அதில் மாங்காய் வத்தல் போட்டு சிறிது நேரம் அடுப்பைக் குறைத்து வைக்க வேண்டும்.சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் அருமையான திருநெல்வேலி வத்தக்குழம்பு தயாராகி விடும்.
வடித்த சாதத்தில் போட்டு,அதில் இந்த குழம்பையும் சுட்ட அப்பளமும் வைத்து சாப்பிட்டால் தேவாமிர்தம் கெட்டது போங்க...............