Wednesday, 2 September 2015

தூக்கம் கண்களைத் தழுவட்டும்!!!(Tips For Good Sleep)

                                                                               

பிறந்த குழந்தை நாள்தோறும் 14லிருந்து 18 மணி நேரம் தூங்குவது அவசியம். சிறுவர் களுக்கு தினம் 14 மணி நேரம் தூக்கம் தேவை. வயது வந்தோருக்கு தினம் 6 லிருந்து 8 மணி நேரம் தூக்கம் தேவை. உடல் உழைப்பாளிகளுக்கு 6 லிருந்து 8 மணி நேரம் தூக்கம் போதாது. ஆண் களை விட பெண்களுக்கு ஒரு மணி நேரம் தூக்கம் அதிகம் தேவை. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங் களுக்கும் தூக்கத்தில் வித்தியாசம் உண்டு. பூனை நாள் தோறும் 18 மணி நேரம் தூங்குகிறது. புலி நாள் தோறும் 16 மணி நேரம் தூங்குகிறது. கோலா கரடி தினம் 22 மணி நேரம் தூங்குகிறது. ஒட்டகம் தினம் 2 மணி நேரம் தூங்குகிறது. நத்தை தொடர்ந்து 3 வருடம் தூங்குகிறது. டால்பின் ஒரு கண்ணால் மட்டும் தூங்குகிறது. வானில் பறக் கும் பறவை பறந்து கொண்டிருக்கும்போதே ஒன் பது விநாடி தூங்கி விழித்து விடுகின்றன. இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்பது விநாடிகள் தூங்கிக் கொண்டே பறக் கின்றன. எறும்புகள் தூங்குவதே இல்லை.
தூக்கத்தில் 8 நபர்களுக்கு ஒருவர் வீதம் குறட்டை விடுகின்றனர். தூக்கத்தில் 10 நபர்களுக்கு ஒருவர் வீதம் பல்லை கடிக்கின்றனர். படுக்கையில் சாய்ந்து ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் தூக்கம் ஏற்பட்டால் ஆரோக்கியமானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தூக்கத்தின் நிலைகள் :
தூக்கத்தின் போது நாம் ஒரே வகையில் தூங்குவதில்லை. இந்நிலையை புரிந்துகொள்ள(Rapid Eye Movement REM – ரெம் நிலை) REM 5 நிலைகளாக உள்ளது:
REM I : கண்களை மூடி மெதுவாக தூக்க உலகத்திற்குள் நுழைதல். கண்களின் அசைவு குறைதல். வெளி உலக சத்தம் சிறிது,  சிறிதாக குறைந்து வருதல். சிறிய சத்தமும்  ஆளை எழுப்பி விடும்.
REM II : இந்நிலையில் இமைகள் மூடியிருக்கும். விழிகள் இருபுறமும் ஆடும். தூக்க உலகத்தினுள் முன்னேறி செல்லுதல். இப் போது மூளையில் ஏற்படும் மின் அலைகளில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள் நிகழும். உடல் தசைகள் சிறிது சிறிதாக தளர்ச்சியடைந்து வரும். இருதய துடிப்பும் உடல் வெப்பமும் சற்று குறையும். புத்துணர்ச்சி மட்டும் இத்தூக்கத்தில் கிடைப்பதால் அதிக நேரம் இத்தூக்கத்தில் கழியும். இந்நிலையில் தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் தன்னை தயார்படுத்துகிறது.
REM III: இந்நிலை தூக்கம் சற்று ஆழமானது. விழிகள் நடுவில் மட்டும் ஆடும். ஆழ்நிலை தூக்கம் இருக்கும். இருதயம் குறைந்த வேகத்தில் இருக்கும்.
REM IV: இந்நிலை தூக்கத்தில் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். சுலபமாக எழுப்ப முடியாது. நன்றாக தூங்கினோம் என்ற உணர்வு ஏற்படுவதற்கும் மறுநாள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் இந்த நான்கு நிலைகளிலும் தேவையான அளவு தூங்க வேண்டியது மிக அவசியம். இத்தூக்க நிலையில் தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை ஏற்படுகிறது.
REM V : இந்நிலை தூக்கத்தில்தான் பல அதிசய தக்க மாற்றம் உடலுக்குள் நிகழும். உடல் விழிப்பு நிலையில் உள்ளபோது மூளை எந்தளவுக்கு மூளையின் நரம்பு செல்கள் துடிப்பாக இயங்குமோ அதே அளவு இத்தூக்க நிலையிலும் இயங்கும். மூளை முழு விழிப்புடன் இருக்கும். உடல் முழு ஓய்வு நிலையில் இருக்கும். இருதயம்வேகமாக ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். சுவாசத்திலும் இரத்த அழுத்தத்திலும் நிறைய மாறுதல் ஏற்படும். தசைகள் அனைத்தும் வலுவிழுந்து காணப்படும். உடல் தசைகளை அசைக்கவே முடியாது. ஆனால் கண்விழிகள் வேகமாக இருபுறமும் அசையும். பெரும்பாலும் இந்த தூக்க நிலையில் தான் கனவு வருகிறது.
தூக்கமின்மையின் காரணம் :
மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங் களாலும், உடலின் ஒவ்வொரு பாகத்தின் இயக் கத்தை கட்டுப்படுத்தும் மூளையின் தனித்தனி பகுதிகளில் தூக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியி லுள்ள செல்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்க மின்மை ஏற்படும்.
மனச்சோர்வு, பதட்டமடைதல், கவலை, தூக்கம், சோகம், வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றுதல் போன்ற மனநல பாதிப்புகளாலும் தூக்கமின்மை உண்டாகும்.
உடல் நோய்களான ஆஸ்துமா, பக்கவாதம், இருதய நோய்கள், வலிகள், அடிபட்ட காயம் வலி, சர்க்கரை நோயால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதாலும், செரிமானக் கோளாறு காரணமாக மேல் வயிறு பாகத்தில் ஏற்படும் சிரமம் காரண மாக தொடர்ந்து தூங்க முடியாமை, தினமும் தாமதமாக தூங்க செல்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் இருக்காது. அதிக குளிர், வெப்பம், ஈரப்பதம், கொசுத்தொல்லை, சத்தங்கள் போன்ற புறக் காரணங்களாலும் சரியான தூக்கம் ஏற்படாது. போதுமான தூக்கமில்லையென்றால் தலைவலி, கண் எரிச்சல், பகலில் வேலையில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த முடியாமை, இருதுய தாக்குதல், வலிப்பு, எரிச்சலடைதல், நினைவுத்திறன் குறைதல், மனக்குழப்பம், சக நண்பர்களிடம் தொடர்பு குறைதல், மன அழுத் தத்தை தொடர்ந்து இரத்த அழுத்தம் நரம்பு தொடர்பான நோய்கள் அதிகரித்தல் போன்ற  கோளாறுகள் உருவாகும்.
ஆங்கில மருத்துவ முறை மாத்திரைகள் தருவது செயற்கையான தூக்கத்தை தரக் கூடிய தும், ஒருவகையான மயக்க நிலையே தவிர இயற்கையான தூக்கமல்ல! நிச்சயமாக இம்மாத் திரைகளுக்கு பக்க விளைவுகள் உண்டு!
சிகிச்சை முறைகள் :
தூக்கத்தை தொலைத்த மாந்தர் அனை வருக்கும் ஒரேவிதமான சிகிச்சை ஹோமி யோபதி யில் இல்லை. இம்மருத்துவ முறையில் வழங்கும் மாத்திரைகளும் தூக்க மாத்திரைகள் அல்ல. ஹோமியோபதி மட்டுமின்றி அக்குப் பஞ்சர், மலர் மருத்துவ முறையிலும் நல்ல பலன் காணலாம்.
ஹோமியோ சிகிச்சை :
• பயம், அதிர்ச்சி போன்ற பாதிப்பினால் தூக்கமின்மை
 - அகோனைட்.
• மகிழ்ச்சியான மனநிலை காரணமாக தூக்கமின்மை   - காபியா.
• வியாபாரம், தொழில் நினைவு காரணமாக தூக்கமின்மை
  - ப்ரையோனியா, அம்ப்ரா கிரிஸியா.
• ஜீரண கோளாறினால் தூக்கமின்மை
 - நக்ஸ்வாமிகா.
• சமீபகாலமாக அடிமனதில் வேதனை, துக்கம் காரணமாக தூக்கமின்மை
 - இக்னேஷியா.
• நாட்பட்ட கவலை, வேதனை காரணமாக தூக்கமின்மை
 - நேட்ரம்மூர், பாஸ் அசிட்.
• முதுமை காரணமாக தூக்கமின்மை
  - பாரிடாகார்ப்
• உடல் உழைப்பினால், மூளை களைப்பினால் தூக்கமின்மை
  - ஆர்னிகா.
• மூளையின் இரத்தசோகை காரணமாக  தூக்கமின்மை
  - கோனியம்.
• பிறருக்காக இரவில் கண்விழித்து சேவை செய்ததினால் தூக்கமின்மை
- காக்குலஸ்.
• குடிகாரர்களின் தூக்கமின்மை
- - அவினா சட்டிவா.
• குழந்தைகளின் தூக்கமின்மை
- சாமோமில்லா.
• வீட்டை பிரிந்த நிலையில் தூக்கமின்மை
- இன்னேஷியா, காப்சிகம்.
• உடல் அரிப்பினால் தூக்கமின்மை
- சோரினம்.
• பொதுவான மருந்துகள்
- பாசிபுளோரா - 6 - மாலை
   - அவினா சட்டிவா 6 - படுக்கும்முன்பு
தூக்கமின்மைக்கான அக்குப்பஞ்சர் புள்ளிகள் :
• DU: 20, P:6, H:5,6
மனநோயினால் தூக்கமின்மை - LIV: 2
 கவலையினால் தூக்கமின்மை - H:7
 அடிக்கடி கனவு, தூக்கம் பாதித்தல் - SP:1
மலர் மருத்துவம் :
• வேண்டாத எண்ணங்கள் மனதில் தோன்றுதல் தூக்கமின்மை
- வொய்ட் செஸ்ட் நட்
• பயம் காரணமாக தூக்கமின்மை
- மிமுலஸ்.
• புதிய இடம், புதிய சூழல், வெளியூர் பயணம்  ஆகியவற்றால் தூக்கமின்மை
- வால்நட்.
• தூக்கமின்மைக்கு பொதுவான மலர்மருந்து
 - ரெஸ்கியூ ரெமடி.
இயற்கையான தூக்கம் பெற சில ஆலோசனை :
• தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக சாப்பாடு முடித்திருக்க வேண்டும்.
• நான்கு மணி நேரத்திற்கு முன்பு டீ, காபி தவிர்த்தல் நலம்.
• தினம் உடற்பயிற்சி, நடைபயிற்சி அவசியம்.
• தூங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்பே
உடற்பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.
• மதியம் தூங்கிப் பழக்கப்பட்டவர்கள் 1/2 மணி நேரத்திற்கு மேல் தூங்கக் கூடாது.
• தூங்குவதற்கு முன் ரம்மியமான இசை கேட்கலாம். 
இரவு வெந்நீரில் குளிப்பது நலம்.