Thursday, 12 June 2014

காய்ச்சல் போக எளிய வழி (அக்குபிரஷர்)!!!

காய்ச்சல் போக எளிய வழி (அக்குபிரஷர்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"உடம்பெல்லாம் வலிக்குது....காய்ச்சல் வரும்போல இருக்குது..." என்று யாரும் சொன்னாலோ.... இல்லை நமக்கே கூட காய்ச்சல் வருவதுபோல தோன்றினாலோ உடனே "ஒரு பாரசிட்டமால் மாத்திரை வாங்கி போட்டுட்டா சரி ஆயிடும்" என்று ஆலோசனை சொல்லவோ/நடைமுறைப்படுத்தவோ "இன்ஸ்டன்ட்" மருத்துவர்கள் தவறுவதில்லை...
இன்னும் ஒருபடி மேலே போய் மருந்து கடைகளில் இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்த "அனுபவ" மருத்துவர்களிடம் ஆலோசனை (!!) பெற்று மாத்திரைகள் வாங்கி விழுங்க தவறுவதில்லை...
இதற்கு என்ன காரணம்?... மருத்துவரிடம் சென்றால் பணம் செலவாகும் என்பது ஒருபுறம்... அல்லது "இதற்கு ஏன் மருத்துவரிடம் போகவேண்டும்" என்ற "எல்லாம் அறிந்த" அறியாமை மறுபுறம்...
வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்ததாக . கிராமங்களில் ஒரு சொல் வழக்கு உண்டு... அது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ.. இதற்கு நிச்சயமாய் பொருந்தும்....
ஆனால் கண்டிப்பாக சுரத்தில் இருப்பவர்களுக்கு நல்லது செய்கிறோம், அன்பை பொழிகிறோம் என்று அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பால், ஜூஸ், மைதவால் ஆனா பிரட், பிஸ்கட் என்று எதுவுமே தரமால் இருந்தாலே ஜுரம் சிக்கல் இல்லாமல் நம்மை விட்டு போகும்..
காய்ச்சல் என்பது "ஒய்வு தேவை" என்று நமது உடல் கொடுக்கும் சங்கேத மொழி... அந்த மொழியை சரியாய் புரிந்துகொண்டு உடலுக்கு முழு ஒய்வு கொடுங்கள்... உடலுக்கு ஒய்வுகொடுக்கிறேன் என்று படுக்கையில் இருந்துகொண்டே தாமாகவோ/ மற்றவரின் அன்பை தள்ள முடியாமலோ கண்டதையும் "உள்ளே" தள்ளுவதை தவிருங்கள்... அப்படி இருந்தால் மட்டுமே சீரண மண்டலத்திற்கும் முழு ஒய்வு கொடுத்ததாக அர்த்தம்... இப்படி ஒருநாளோ- அல்லது இரண்டு நாளோ முழு ஒய்வு கொடுத்துப்பாருங்கள்.... காய்ச்சல்.. போயி போச்சு.. போயிந்தே.. இட்ஸ் கான்.. என்று நீங்களே "பட்டினிக்கு" பரிந்துரை செய்யும் அளவிற்கு புத்துணர்ச்சியாகி விடுவீர்கள்...
சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமால் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மஞ்சள் தூளை போட்டுக் ஆவி பிடிச்சாவே தலைவலி போகும்.
இப்படி உடலுக்கு முழு ஒய்வு கொடுக்கும் அதே நேரம் இன்னும் விரைவாக குணமாகி அதீத புத்துணர்ச்சியுடன் பணிகளை தொடர எளிய அக்குபிரஷர் சிகிச்சை முறையை கையாளலாம்...
வலது உள்ளங்கையை இடது தோளின் மேலும், இடது உள்ளங்கையை வலது தோளின் மீதும் கழுத்தை ஒட்டினாற் போல வைக்கவும்.. அப்போது இரண்டு கைகளின் விரல்கள் நம் முதுகில் எந்த இடத்தில் தொடுகிறதோ அந்த இடத்தை விரல்களால் 3 நிமிடங்கள் தொடர்ந்து சீராக அழுத்தி விடவும்...  இப்படி தொடர்ந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்யவும்.. மேலும் கைகளின் அனைத்து விரல்களிலும் நகக்கண்களின் இருபுறமும் 5நிமிடங்களுக்கு படத்தில் காட்டி இருப்பதுபோல ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை பிடித்து விடவும்...உடனடி குணம் பெறலாம்...
ஜுரம், சளியுடன் கூடிய குளிர் ஜுரம் இப்படி எந்த காய்ச்சலாக இருந்தாலும் இந்த முறையில் முயன்று பாருங்கள்..ஜுரம் உங்களை விட்டு மருந்து, மாத்திரைகள் இல்லாமல் பறந்தே போகும்.