அஞ்சலி முத்திரை!,
எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரை கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு, ஆனால் இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இது தமிழனின் கலை, இதை வாசிக்கும் நண்பர்கள் இந்தச் செய்தியினை. தமிழறிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான எதிர்பார்ப்பு….முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.பின் குறிப்பு :-இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்