Sunday, 15 June 2014

நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம்!!!

மனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.



நாம் எதை சாப்பிடுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்ற சொலவடைக்கு ஏற்றவகையில் நம் உணவு எந்த வடிவில் இருக்கிறதோ அந்த வடிவிலான நம் உடல் உறுப்புக்களுக்கு அவை வலிமை சேர்ப்பவையாக இருக்கின்றன என்பது ஆராய்ச்சி மூலமாக கண்டறிந்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். 


சில கனிவகைகளை கீழே காணலாம்.


1. காரட்டும், கண் விழியும்.
Courtesy: iStockphoto
காரட்டை பச்சையாக மென்று தின்பவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். காரட்டை குறுக்காக நறுக்கி வைத்துப் பார்த்தால் கண்ணின் கருவிழியில் உள்ளது போல தெரியும். காரட்டில் நிறைய விட்டமின்களும், ஆண்டி ஆக்சைடன்ட்களும் உள்ளன. விழித்திரைக் குறைபாடுகளை நீக்கும் தன்மை காரட்டுக்கு உண்டு என்கிறார் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த டாக்டர் சாசன் மௌலாவி.


2. வால்நட்டும், மனித மூளையும்.
Courtesy: iStockphoto
வால்நட்டில் நாம் காணும் மடிப்புக்களும், சுருக்கங்களும், மூளையை ஒத்திருக்கின்றன. இரண்டு பாகங்களை பிரிக்கும் பிரிவுகள் கூட மூளையை போலவே இருப்பதை காணலாம். இவை மூளைக்கான உணவு என்றே அழைக்கப் படுகின்றன. ஒமேகா த்ரீ பாட்டி ஆசிட்களை நிறையக் கொண்ட வால்நாட்களை மூளையின் வாழ்நாட்களை அதிகரிக்கும். ஆரோக்கியமான மூளையை பெற வால்நட்டுகளை விரும்பி உண்ணுங்கள்.


3. செலரியும், எலும்பும்:



செலரியின் நீண்ட மெல்லிய தண்டுகள் மனித உடலின் எலும்பைப் போலவே காட்சி அளிக்கின்றன. எலும்புக்கு வலிமை சேர்ப்பவை செலரி என்பதில் ஐயமே வேண்டாம். எலும்பில் இருபத்து மூன்று சதவீதம் சோடியம் சத்து உள்ளது. செலரியிலும் சோடியம் அதே அளவில் இருக்கிறது என்பது வியப்பூட்டும் உண்மை. செலரியில் உள்ள சிலிக்கன் மூலக் கூறு எலும்பின் கட்டுமானத்தின் அடிப்படையாக விளங்கும் ஒன்று. செலரி சாப்பிடுவோருக்கு எலும்பு தொடர்பான தொல்லைகள் நீங்கும்.


4. அவாகேடோவும், கர்ப்பப்பையும்.

முட்டை பல்பை போல காட்சி அளிக்கும் கருப்பையும், அவேகாடோ பழமும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளவை. கருப்பை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட துணை புரிவது அவேகாடோ. ஃ பாலிக் ஆசிட் நிறைய கொண்ட அவேகாடோ உண்பதால் செர்விகள் டிச்பெப்சியா என்னும் குறைபாட்டை நீக்கலாம். இதன் மூலம் கருப்பை கான்சர் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சொமேர் எனும் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்.


5. சாத்துக்குடி பழமும், மார்பகமும்.


இரண்டும் பார்க்க ஒன்று போல  இருப்பதின் ரகசியம் லிமொனாயிட்கள் எனும் பொருள் சிட்ரஸ் வகை பழங்களில் நிறைந்திருப்பது தான். மார்பக புற்று நோயை வராமல் தடுக்கும் ஆற்றல சிட்ரஸ் வகை பழங்களுக்கு உண்டு.

6. தக்காளியும், இதயமும்.

தக்காளிப் பழத்தை குறுக்காக நறுக்கிப் பாருங்கள். அவற்றில் காணப்படும் அறைகள் இதயத்தின் உள்ளே உள்ள அறைகளைப் போன்றே இருக்கும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் என்சைம் தக்காளியை உண்பதன் மூலம் இதய நோய்களை தடுத்துக் கொள்ளலாம் என்கிறார் எலிசபெத் சோமர். தக்காளியுடன் சிறிது தேனை கலந்து சாப்பிட்டால், லைகொபீன் சத்து பத்து மடங்காக உடலில் சேரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.


7. இஞ்சியும், இரைப்பையும்.


வயிற்றுப் பொருமல் வந்தால் ஜிஞ்சர் பீர் சாப்பிட்ட அனுபவம் உண்டா? 


ஆம் என்று சொல்பவருக்கு இஞ்சியின் பெருமைகளை விளக்கவே வேண்டாம். குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கும் வல்லமையும், வயிற்றின் ஜீரணக் கோளாறுகளை நீக்கும் வல்லமையும், இஞ்சிக்கு உண்டு. இஞ்சியை உணவில் அளவாய் சேர்த்து வளமாய் வாழ்வோம்.


8. சர்க்கரை வள்ளிக் கிழங்கும், கணையமும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பலர் மறந்தே போய் விட்டோம். இதனைப் பார்த்தால் கணையத்தை பார்க்க வேண்டாம். இரண்டும் ஒன்று போலவே காட்சி அளிக்கும். சர்க்கரை வெள்ளியில் உள்ள பீடா கராடின் கணையம் வயதாவதாலும், கான்சராலும் பழுது படாமல் காக்கும்.
ஆதாரம்: http://www.womansday.com