Saturday, 15 June 2013

உலகை வீடியோக்களால் வலம் வரலாம் !!!!

உலகை வீடியோக்களால் வலம் வரலாம் என அழைக்கிறது டிராவீடியோ. பயன வீடியோக்களுக்கான கூகுல் என இந்த தளத்தை கொண்டாடலாம்.சுற்றுலா நாட்டம் உள்ளவர்களும் சரி,பயனங்களை விடும்புகிறவர்களும் சரி இந்த தளத்தை பார்த்தால் சொக்கு போய் விடுவார்கள்.
காரணம் இந்த தளத்தில் பயனம் சார்ந்த அருமையான வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.இரண்டு விதங்களில் இதை செய்யலாம்.முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பயன வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.இல்லை என்றால் குறிப்பிட்ட இடம் அல்லது நகரை குறிப்பிட்டு அதற்கான வீடியோ காட்சிகளை தேடி ரசிக்கலாம்.
முகப்பு பக்கத்தில் வீடீயோ பட்டியலும் இரண்டு விதமானவை.அதிகம் பார்க்கப்பட்ட பயன வீடியோக்கள் முதல் வகை என்றால் இரண்டாவது வகை பிரபலமான நகரங்கள். அதாவது வீடியோக்களை தேடுபவர்களால் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிமாக தேடப்பட்ட நகரங்கள் அடிப்படையில் இந்த இரு பட்டியலும் அமைந்துள்ளன.
குறிப்பிட்ட வீடியோவை கிளிக் செய்ததும் அந்த வீடியோ எத்தனை பேரால பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.அந்த‌ வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.வீடியோ பற்றிய கருத்தையும் பதிவு செய்யலாம்.அதே போல ஏற்கனவே பதிவான கருத்துக்களையும் படித்து பார்க்கலாம்.
சுற்றுலா செல்ப‌வர்கள் அதற்கு முன்பாக் இணைய ஆய்வில் ஈடுபடுவது வழக்கமாக இருக்கிறது. விக்கிபீடியாவில் துவங்கி சுற்றுலா மற்றும் பயன தளங்களும் இதற்காக இருக்கின்றன.யூடியூப் பிரியர்கள் பயனம் சார்ந்த வீடியோக்களை தேடிப்பார்த்து பார்க்க விரும்பும் நகரங்கள் பற்றிய தகவல்களை காட்சிரீதியாகவே தெரிந்து கொள்ளலாம்.
இத்தகைய வீடியோக்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிப்பதற்கான எளிய வழியாக டிரவீடியோ இருக்கிறது.
———-

No comments: