Monday, 21 October 2013

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.!!!

சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர்.மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன்
படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார்.சிறுநீர்
கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர். அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது.  அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், அவ்வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும். அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.
சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.


 மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார்.விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம்  5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயறக்கையை நேசிக்கும் ஒரு இயற்க்கைவாசி தான்.