Monday, 1 July 2013

அனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..!!!

நீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக்கும். எனவே இதனை அழிப்பதற்காக வினைத்திறனான மென்பொருளாக நாம்CCleaner ஐப் பயன்படுத்துகின்றோம்.

உங்கள் கணணியில் வேறு தேவைகளுக்காக பல User Accounts களைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு கணக்கினுள்ளும் சென்றே கணணியை சுத்தஞ்செய்ய வேண்டும். ஆனால் இம்முறையை ஒருமுறை செயற்படுத்துவதன்மூலம் பின்னர் ஏதாவது ஒரு கணக்கினை Login செய்யும் போதே தன்னிச்சையாகவே அனைத்து User Account களும் சுத்தஞ் செய்யப்பட்டுவிடும்.

முதலில் Start Button  ஐக் கிளிக்செய்து படத்தில் காட்டியவாறு Search boxஇல்  regedit  என Type செய்து Enter பண்ணி RegistryEditor ஐ திறந்துகொள்ளவும்.



பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று RUN என்பதை அடையவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Run



இப்போ RUN என்பதை கிளிக் செய்துவிட்டு வலது பக்கத்தில் உள்ள பகுதியில் ஏதாவதொரு இடத்தில் வைத்து Right-Click செய்து New à String Valueஎன்பதை தெரிவுசெய்து New Value என்பதற்கு CCleaner என பெயர்மாற்றவும்.



இப்போ CCleaner என்பதில் வைத்து Double-Click செய்து அல்லது Right-Clickசெய்து Modify… என்பதை கிளிக் செய்வதன் மூலம் தோன்றும் விண்டோவில் உள்ள Value date என்ற இடத்தில் கீழ் உள்ளதை Type செய்யவும்.

C:\Program Files\CCleaner\CCleaner.exe /auto



(குறிப்பு: நீங்கள் 64-bit Windows பயன்படுத்தினால் மேலுள்ள சொல்லில் உள்ளProgram Files என்பதற்கு பதிலாக  “ Program Files(x86) “ என்பதை எழுதவும். )

இப்போ நீங்கள் கணக்கினுள் நுழையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைத்து கணக்குகளும் தன்னிச்சையாகவே  CCleaner மூலம் சுத்தஞ்செய்யப்பட்டுவிடும்.....


No comments: