Tuesday, 2 July 2013

ஒரு கிளிக்கில் எல்லா உலாவிகளினது History Files மற்றும் Temporary Files முழுவதையும் அழிக்க.!!!

பெரும்பாலான இணையப் பாவனையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்காக பல உலாவிகளைப்(Browsers) பயன்படுத்துவதுண்டு. இவை அனைத்தினதும் பயன்பாட்டினால் பெருமளவான Temporary Files, Cookies மற்றும் History Files ஆகியவை தேங்குகின்றன. இதனால் வன்தட்டில் இடம் குறைவதுடன் கணணியின் வேகத்தையும் குறைக்கின்றது. இவை அனைத்தையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு அழிப்பது என்று இப்போ பார்ப்போம்.

இதற்காக முதலில் கீழ் உள்ள இணைப்பை தொடுத்து மென்பொருள் ஒன்றினை நிறுவிக்கொள்ளவும்.
இது வெறும் 1MB இலும் குறைந்ததே.( தரவிரக்கிய மென்பொருளை நிறுவும்போது தேவையற்ற Toolbars இருப்பின் அவற்றை தவிர்த்து நிறுவுவது நல்லது.)
நிறுவியபின்னர் மென்பொருளை பயன்படுத்தவேண்டியதுதான். இம்மென்பொருளில் பல நன்மைகள் உண்டு.

அதாவது இதில் பல Tab ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை நாம் தெரிவுசெய்யும் வசதி உள்ளது. உதாரணமாக நாம் எந்தெந்த உலாவிகளின் History Files களை அழிக்க வேண்டுமோ அவற்றை மட்டும் தெரிவு செய்யலாம்.


மேலும் குறிப்பிட்ட ஒரு உலாவியில் Password, Autofill போன்றவை சேமித்து வைத்திருப்பின் அவற்றை தவிர்த்து மற்றவற்றை அழிக்கலாம்.

இதுபோன்ற பல வசதிகளெல்லாம் உள்ளது. பயன்படுத்திப் பாருங்கள். 

No comments: