Saturday, 28 September 2013

VLC Player பல புதிய வசதி!!!

VLC Player பல புதிய வசதிகளுடன் 2.1 VLC Player ஐப் பயன்படுத்தி குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் எவ்வாறு வெட்டி வெட்டி எடுக்கலாம்!...

இன்று நாம் வீடியோ கோப்புக்களின் ஏராளமான வடிவங்களை அவதானிக்கின்றோம் உதாரணமாக .WMV, .3GP, .MKV, MP4 என பட்டியலிட்டுக்கொண்டே செல்ல முடியும். என்றாலும் இந்த அனைத்து வடிவங்களையும் எமது கணனியில் தரப்பட்டுள்ள Media Player மூலம் இயக்க முடிவதில்லை எனவே நாம் கணனியிலேயே தரப்படும் Media Player இனை விட்டு விட்டு மூன்றாம் நபர் மென்பொருளினை பயன்படுத்துவதுண்டு அந்த வகையில் VLC Media Player ஆனது அநேகமானவர்களின் அபிமானத்தை வென்ற ஒரு Media Player ஆகும்.

மேலும் இதனை சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்த முடியும் என்பதுடன் பல சுவாரஷ்யமான வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவைகள் தவிர ஏராளமான வீடியோ கோப்பின் வடிவங்களையும் இதன்மூலம் இயக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 2.1 எனும் இதன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியுமான இதனை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்லவும்.

http://www.videolan.org/vlc/releases/2.1.0.html

VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.

பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.

இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.