கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகு தான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும். நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். 5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்.
Hair an

No comments:
Post a Comment